Monday, March 17, 2008

பிரபலங்களின் விமர்சனம் : இந்த 'வியாதிக்கு' மருந்து கண்டுபிடிக்கவில்லை.

மூன்று வயதில் ஞானப்பால் குடித்து பாடினாராம் சம்பந்தர், இங்கு பிரபல எழுத்தாளன் என்ற போர்வையில் மனப்பால் குடித்துக் கொண்டு எவரையும் இகழமுடியும் என்பதை ஓனான்கள் கூட மெய்பித்து வருகின்றன.

முதலில் பிரபல எழுத்தாளன் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். நீ நீங்கள் ஒரு எழுத்தாளன் என்றால் எங்கேயோ படித்த 100 புத்தகங்ளின் மேட்டர்களை உங்கள் மொழிக்கு மாற்றி உங்களால் எழுத்தப்பட்டவையாக ஒரு பத்து புத்தகங்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு அல்லக்கைகளை தயார் செய்து, இவை எல்லாம் ஒரே இரவில் எழுதி முடிக்கப்பட்டவை, பின்னவினத்துவமும் பினாயிலும் கலந்து எழுதப்பட்ட இத்தகைய சிலாக்கியங்கள் இதுவரை தமிழ் புதினாவில் வந்ததில்லை என்று அல்லக்கைகளை வைத்து ஊடகங்கள் தோறும் வதந்தி (வாந்தி அல்ல) எடுக்க வேண்டும். அதன் பிறகு நீ, நீங்கள் ஒரு பிரபல எழுத்தாளன் தான்

அதாவது "ஆகா, அவரது எழுத்துக்களைப் பார்த்தீர்களா ? ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரும், அரேபியாவில் ஷேக்குகளும் படைக்கும் இலக்கியங்களெல்லாம் ஒத்தை ஆளாக நின்று படைத்துக் கொண்டு தமிழுக்கு தாடியாக ஆக்கி வைத்திருக்கிறார். இவரல்லவோ எழுத்தாளர். மற்றவர்கள் எல்லாம் எழுதுவது இலக்கியமா, பேனா பிடிப்பவன் எல்லாம் எழுத்தாளானா ? மாற்றி கொள்ளுங்கள் ஐயா, மாற்றிக் கொள்ளுங்கள். நவீனம், பெளதீகம்
இதெல்லாம் கலந்தும், கக்கா போவதிலும் வெரைட்டி கண்டுபிடித்து அதை கதையில் திணிக்க வேண்டும் அவனே எழுத்தாளன். அப்படி எழுதும் ஒரே எழுத்தாளுமையாளன் எங்கள் சோ அண்ட் 'சோவின்' வகையறா ஆளுதான் தான் என்று பரப்பிவிடவேண்டும்.

அப்படி ஒரு கூட்டம் சேர்த்துவிட்டால் அந்த எழுத்தாளான் தான் ஒரு பிரபலம் என்ற போர்வையில் எவர் மீது வேண்டுமானாலும் ஒண்ணுக்கு அடிக்கலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி என்று குறிப்பு கொடுத்து சிறுகதை எழுதுபவர்களை கிண்டல் அடிக்க வேண்டுமா ?

"ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தேன், ஆழயோசித்தேன்...அந்த நேரத்தில் தலைக்கு மேல் காக்காய்..." என்று ஆரம்பித்து கோவணத்தை இறுக்கி முடிந்து கொண்டு எழுதுங்கள், உங்கள் பெயர் ஒரே வார இதழ்மூலம் பிரபலமாகிவிடும் என்று குறிப்பு எழுதி கிண்டல் அடிக்கலாம்

புதுக்கவிதை எழுதுபவர்களை கிண்டல் அடிக்க,

"மூளையைக் கசக்கினேன்,
மூக்கில் ஒழுகியது - அறிவூற்று
முக்கிப் பார்க்கும் போது
மூச்சை அடைத்தது - துர்நாற்றம்
"


சூப்பர் கவிதை, இதுப்போல் எழுதினால் போதும், கூடவே இயலாமை, புண்ணாக்கு, தலித்தியம், நாரசம், நரமாமிசம் எல்லாம் சேர்த்துக் கொண்டால் புதுசு புதுசு புதுக்கவிதைதான்

பின்பு

தொடர்கதை எழுத்தாளர்களை எப்படி கிண்டல் அடிப்பது,

"அவள் அவனைப் பார்த்தாள், அவன் அவளின் தொடையைப் பார்த்தான்..." தொடர்கதையை இப்படித்தானே தொடங்க வேண்டும்.

ஐயா சாமி தாவு தீறுதா?......பிரபலமெல்லாம் இப்படித்தான் வளரும் எழுத்தாளர்களை விமர்சனம் செய்யனும்

இந்த பிரபல எழுத்தாளர்களெல்லாம் முலைப்பால் குடித்தவுட்டு முக்கி விழுவது கூட எழுத்தாக மாறி புதினம் படைக்கிறதாம். மற்றவர்கள் எல்லோரும் மண்டிபோட்டு மண்டையை உடைத்து எழுதுறாங்க, போங்கடா நீங்களும் உங்க விசம விமர்சனங்களும்.

இதுக்கும் ஜெமோ எழுதிய நீங்களும் புதுக்கழுதை வளர்க்கலாம் என்பதற்கும் சம்பந்தம் இல்லை

0 comments: