Sunday, February 24, 2008

2007ன் சிறந்த வலைப்பதிவாளர்.

2007ல் மொக்கை மன்னர்கள் கோலோச்சினார்கள், சுப்புடுவாகிய நான் 2006ல் இருந்தே பதிவுகளை படித்துவருகிறேன். இருங்க, 2006ல் ஸ்டார் பதிவர் யார் என்று தெரியுமா ? தெரிஞ்சா பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை. 2007ல் ஏன் ஸ்டார் பதிவர் செலக்சன் நடக்கவில்லை. காரணம் இருக்கு. ஒரு பதிவர் ஸ்டார் பதிவர் ஆக அடிப்படை தகுதி என்று ஒன்று உண்டு, அதன் படி அவர் போலிக்கு தெரிந்தவனாக இருக்கனும்ம், தெரிஞ்சவனாக இருந்தால் மட்டும் போதாது, போலிக்கு சக பதிவர்களின் மனைவி மகளைப் பற்றி ஆபாசமாக எழுதித் தரனும், அதையும் அலுவலக முகவரியில் இருந்தே தந்திருந்து அந்த சான்றிதழை போலி அவன் பதிவில் வெளி இடனும், அதன் பிறகுதான் ஸ்டார் பதிவர் அறிப்பை செய்ய முடியும், இதெல்லாம் இல்லாமலே ஒருவர் ஸ்டார் பதிவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டாரே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் போலிக்கு அல்லக்கையாக செயல்பட்டார் என்ற முதல் தகுதியே சிறப்பு தகுதியாக கருதி ஸ்டார் அவார்டு வாங்கிட்டார். 2007க்கு யாருக்கு கொடுப்பது ?

2007ல் போலி எங்க போனான் என்றே தெரியல, அப்பறம் எப்படி அவனுக்கு அல்லக்கையாக செயல்பட முடியும்? எனவே 2007ன் சிறந்த ஸ்டார் பதிவர் யாரும் இல்லை.

போலி அண்ணா, திரும்ப வாங்க 2008ல் யாருக்காவது ஒருவருக்கு ஸ்டார் பதிவர் அவார்டு கொடுகணும்

Monday, February 4, 2008

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு....

இந்திய தேசிய அரசு ஒரு உத்தரவுப் போட்டா, அதை மதிச்சு நடக்கிறது தானே மாநில அரசாங்கத்தின் வேலை. நடுவன் அரசு, எஸ்.சி/எஸ்.டி சமூகத்தினருக்கு உதவித் தொகை வழங்குவதில் ஒரு சிறிய மாற்றம் செய்திருக்கிறது. அதை அப்படி மதித்து நடக்காமல், தான் தோன்றித்தனமாக, இந்த திராவிட திம்மிகள் தவ்வுகிறது.

அப்படி என்ன பெரிசா மாறுதல் செஞ்சிட்டா. அட்டவனை சாதி மக்களுக்கு, கல்லூரியில் நுழைந்துப் படித்தாலே, உதவித் தொகை என்று இருந்ததை, 60% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, உதவித் தொகை என்று மாற்றியமைச்சியிருக்கா. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு. 60% என்று சொன்னால் தானே படிப்பார்கள். இல்லாவிடில் படிக்காமல் பணம் மட்டும் பெற்று சும்மாயிருப்பர்கள் அல்லவா.

அதுவுமில்லாமல், சிறப்பு தகுதிகள் இல்லையே. உன்மையான மைனாரிட்டியாக ( அதாவது 3% மொத்த ஜனத்தொகையில் ) இருந்தால் தானே அது கொடுக்கப்படனும்.
அதில் ஒரு உள்ளார்ந்த உன்னதமான நோக்கம் இருக்கு என்பது தமிழகத்தின் நிரந்திர தலைவலி, ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் தெரியும். காங்கிரஸ்காரா எல்லாம், அவ அவா சண்டையில் மும்மரமா இருக்கா. அதுனாலே, அவ வழக்கம் போல ஒதுங்கிடுவா.
இந்த மாற்றம் அறிவித்தவுடன், உடனடியாக கருணாநிதி, இதை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். தமிழகத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்று அறிவிக்கிறார். படிக்க வந்துள்ள தாழ்த்தப்பட்டுள்ள சமுதாய மாணவர்களின் கண்களைக் குத்தும் மோசமான முயற்சி என்று வீரமணி சொல்லுறார். வை கோ, மத்திய அரசு, இந்த உத்தரவை மீட்டுக்கொள்ள வேண்டுகோள் வைக்கிறார். கம்பூனிஸ்ட் கட்சிகள், இது அந்த மக்களுக்கு இழைக்கப்ப்டும் துரோகம் என்று அலறுகிறது.

ஆனால், நம்மாத்து பொம்மனாட்டி, ஜெயலலிதா, அதை எல்லாம், சட்டை செய்யவே இல்லை. அவருக்குத் தெரியும். எது மக்கள் பிரச்சனை. அன்பழகன் உதவிப் பேராசிரியரா, இல்லை பேராசிரியாரா என்பதற்கு விடை கண்டுப்பிடிப்பது தானே முதல் வேலை. அதை விடுத்து, இது மாதிரி விசயங்களில் தலையிடலாமா. இது வரை, ஜெயலலிதா தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதாக யாராவது நிருபிக்க முடியும்மா. முடியாது. அந்த தப்பை அவர்கள் செய்யவே மாட்டார்கள்.

இந்திய இறையான்மைக்கு சவால் விடும், கருனாநிதி நடுவன் அரசின் ஆனையயை மதிக்கத் தவறியதற்காக, ஆட்சியயை கலைக்க முடியும்மா என்று யோசித்து வருகிறார். அதனால், அந்த உன்னதமான காரணத்தை, மக்களுக்கு அறிவிக்க முடியாது சூழ்நிலையில் இருக்கிறார். அது நீசர்களுக்குச் சொன்னாலும் புரியாது.

ஜெயலலிதா நினனப்பதைச் செய்யும், உலக அறிவாளி சோ, மாரி போல் கருத்துக்களைப் பொழிபவர். அவர் கூடிய விரைவில் தனது கேள்வி பதிலில் இதற்கான சப்பைக் கட்டு, கட்டுவார் என்று எதிர்பாருங்கள்.

Sunday, February 3, 2008

கிச்சு மாமாவுக்கு ஆரிய 'நச்' கேள்விகள்.

கிச்சுமாமா உள்ளங்கையை தேய்து சொல்கிறார், "தேவபாசையும், தமிழும் ஆதிகாலத்து பாஷைகளாம், இரண்டிற்கும் பொதுவான அம்சம் என்பது போல் தேவ ரிஷிகளின் பெயர்கள் இரண்டு பாஷைகளின் பொத்தகங்களிலும் உள்ளதாம், வெள்ளைக்காரன் ஆரியர் திராவிடர் என்று பிரித்து போட்டுவிட்டு பிராமனாளுக்கும், மத்தவாளுக்கும் பேதம் பிரிச்சு வச்சிட்டான்"

மாமாவுக்கு சில கேள்விகள்.

வெள்ளைக்காரன் எத்தனை 'ஆரிய' பவன்களை திறந்து வைத்து பெயர் வைத்தான்?
வெள்ளைக்காரன் எங்கே எப்போது 'ஆரிய' சமாஜ் என்ற பார்பன அமைப்பை தோற்றுவித்தான்?
வெள்ளைக்காரன் சூத்திரவாள் யார் ? ப்ராம்ணவாள் யார் என்று எப்போது பிரித்தான்?
வெள்ளைக்காரன் மனுவை அச்சிட்டு வீடுவிடாக கொடுத்தானா?
வெள்ளைக்காரன் ப்ராம்ணவாள் ப்ரம்மாவின் மூக்கில் இருந்து பிறந்தவராகவும், சூத்திரன் காலில் இருந்து பிறந்தவராகவும் எப்போது பிரச்சாரம் செய்தான்?