Thursday, March 6, 2008

சுஜாதா மறைவு பாரதிக்கு இழப்பு !

தமிழ் என்றாலே 21 ஆம் நூற்றாண்டில் நினைவுக்கு வரும் பெயர் பாரதி, பாரதிப் போல் புலவன் இல்லை. பார்த்தனைப் போல் வீரன் இல்லை. அப்படிப்பட்ட பாரதிக்கு உலகம் தோறும் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கிறார்கள். பாரதி சங்கம் இல்லாத நாடே இல்லை.

கடந்த 40 ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகை தன் எழுத்தாற்றலால் கட்டிப் போட்ட ஒரே எழுத்தாளர் சுஜாதா மட்டுமே, மற்றவர்கள் எல்லோரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள எழுதினார்கள். சுஜாதா மட்டுமே அவரது எழுத்தால் அடையாளம் காணப்பட்டார், பின்பு அவரது அடையாளமே இலக்கியம் என ஆயிற்று.

உலக தமிழார்வளர்கள் அனைவரும் பாரதி தமிழ்ச் சங்கம் போல், சுஜாதா அவர்களின் பெயரிலும் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து தமிழை வளர்க்கலாம். ஒரே ஒரு கஷ்டம் தான் பாரதி சங்கம் பாதியாக குறைந்து போகும். உவேசா ஐயர் முதல் - பாலச்சந்தர், எஸ்வேஷேகர் வரை பார்பனர்களின் தமிழ்ச் சேவை மிகப் பெரியது.

வாழ்க பாரதி புகழ் ! வாழ்க சுஜாதா அவர்களின் புகழ் !

0 comments: