Friday, January 25, 2008

தினமலரின் கவலை - பஞ்சாங்கம் "நாட்டுடமை" ஆகுமா?

வீ.ராஜகோபால், ஓய்வு பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மயிலாப்பூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்:

தீபாவளி, பொங்கல் பண்டிகை, தமிழ் வருடப் பிறப்பு எல்லாம் பஞ்சாங்கப்படி, நாள், நட்சத்திரம் பார்த்து, இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள். "பஞ்சாங்கம் பார்க்க மாட்டோம்' என பகுத்தறிவாளர்கள் கூறினாலும், ஜோதிடர்கள் கணித்த பஞ்சாங்கப்படி தானே பொங்கல் வருகிறது. பஞ்சாங்கம் என்றால், வருடம், மாதம், நாள், நட்சத்திரம், திதி என்ற ஐந்து அங்கங்கள் கொண்டது. சூரியன் (ஞாயிறு), சந்திரன் (திங்கள்), செவ்வாய் (அங்காரகன்), புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகிய கிரகங்கள் விண்வெளியில், 12 ராசி மண்டலங்கள் வழியாக சஞ்சாரம் செய்கின்றன என்பதை அடிப்படையாக வைத்தே ஜோதிட நிபுணர்கள் பஞ்சாங்கங்களை கணிக்கின்றனர். ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும், தை மாதம் முதல் தேதியன்று பொங்கல் பண்டிகை என்று பஞ்சாங்கம் ஏன் சொல்கிறது? அதுவரை தனுசு ராசியில் இருந்த சூரியன், தை முதல் நாள் அன்று மகர ராசியில் பிரவேசிக்கிறார். ஆகவே தான், இந்தியாவெங்கும் இந்துக்கள் தை முதல் நாளை, "மகர சங்கராந்தி' என்று கொண்டாடுகின்றனர். அது உத்தராயணம் தொடங்கும் புண்ணிய தினமும் ஆகும். மகர ராசியில் பிரவேசிக்கும் சூரிய பகவானுக்கு, தமிழகத்தில் மக்கள் பொங்கல் வைத்துப் படைப்பதால், அதற்கு பொங்கல் என்று பெயர். இதனால் தான் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு மகர சங்கராந்தி அல்லது பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.பகுத்தறிவு வாதம், ஈரோட்டு குருகுலம் பிறப்பதற்கு பல நுõறு ஆண்டுகள் முன்பிருந்தே, தமிழ் வருடப் பஞ்சாங்கங்கள் பொங்கல் பண்டிகை வரும் நாள் பற்றி கூறி வருகின்றன. ஆகவே, காலம் காலமாக பஞ்சாங்கம் பார்த்து இந்துக்கள் கொண்டாடி வரும் பொங்கல் , மகர சங்கராந்தி புண்ணிய நாளை, இப்போது பகுத்தறிவுக்காரர்களும் ஏற்றுக் கொண்டு, "தமிழர் திருநாள்' என்று விழா எடுப்பது வரவேற்கத்தக்கதே. தை மாதம் முதல் நாள் தான் தமிழரின் புத்தாண்டு என விரைவில் அறிவிப்பு வரும் என்றால், இந்தப் பங்குனி முடிந்து, சித்திரையில் வெளிவர இருக்கும் சர்வதாரி பஞ்சாங்கங்களுக்கு அரசாங்கம் தடை விதிக்குமா? சித்திரை மாதம் முதல் அடுத்த மார்கழி முடிய சர்வஜித்து ஆண்டு தான் என்றும், சர்வதாரி பஞ்சாங்கம் அடுத்த தை மாதம் அதாவது ஆங்கில 2008ம் ஆண்டு தொடங்கி 2009ம் ஆண்டு மார்கழி வரை நீடிக்கும் என அரசாங்கம் ஆணை பிறப்பிக்குமா? பிறப்பித்தால் அது சட்டப்படி செல்லுமா? தமிழ்வருடப் பஞ்சாங்கங்கள் தயாரிக்கும் ஜோதிடர்களும், பஞ்சாங்கம் பார்க்கும் மக்களும் இதை ஏற்றுக் கொள்வார்களா அல்லது தமிழக அரசே பஞ்சாங்கம் தயாரிப்பதை நாட்டுடைமை ஆக்கி, "தை மாதம் முதல் மார்கழி வரையிலான தமிழ் ஆண்டு' எனப் புதிய முறையில் பஞ்சாங்கங்கள் தயாரித்து விற்பனை செய்வார்களா? ஒன்றும் புரியவில்லை.
___________________

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப...... முக்கியம், குடுமி இல்லாமல், காதுல பூ வைக்காமல் வாழப் பழகவில்லையா ? இதெல்லாம் வீட்டுக்கு வீடு வந்து யாரும் சொன்னாதால் பார்பனர்கள் விட்டொழித்தார்களா ?

பார்பனரின் ஆசிர்வாதத்துடன் பஞ்சாங்கம் மசுரு மட்டை எல்லாம் பார்த்து பார்த்து பாரதம் சுபிக்க்ஷ்ம் அடைந்து பசிபினி பஞ்சம் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்றுவாழ்கிறார்கள்...? போங்கடா பொழப்பத்தவனுங்களா.

வீ.ராஜகோபால், ஓய்வு பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மயிலாப்பூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: - என்னது....? ஆதிதிராவிட நல அலுவலராக இருப்பவர் மயிலாப்பூர் மாமாவா ? கெட்டுது போ ! நல்லா இருங்கடே. ஒருவேளை ஆதிதிராவிடர் என்று வைத்துக் கொண்டாலும் பழைய பஞ்சாங்கத்துக்காக யாராவது இவ்வளவு கவலை அடைவார்களா ? தினமலர் மாமா...! குடுமியை மறைங்கோ. ப்ளாகர்கள் மோசமானவர்கள். சட்டைக்குள் நெளிவதை கண்டுபிடித்துவிடுவார்கள்.

6 comments:

Anonymous said...

இது உங்கள் இடம் என்று தலைப்பு இட்டு யாரோ பெயரில் அவர் எழுதுகிறார், இவர் எழுதுகிறார் என்று டுமில் விட்டு, பார்ப்பன நரித்தனத்தை காட்டுகிறது தினமலம், அவர்களது சிந்தனையை பரப்ப இதுவும் ஒரு வழி.

Anonymous said...

ஐயா சுப்புடு செம நக்கல் தான் உங்களுக்கு. அதுசரி தினமலம் எல்லாம் இன்னுமா படிக்கிறீங்க???

said...

//ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப...... முக்கியம், குடுமி இல்லாமல், காதுல பூ வைக்காமல் வாழப் பழகவில்லையா ? இதெல்லாம் வீட்டுக்கு வீடு வந்து யாரும் சொன்னாதால் பார்பனர்கள் விட்டொழித்தார்களா ?//

:-)))))

பஞ்சாங்கம் எப்படிப் பார்க்க வேண்டும் என்று சட்டம் போடவில்லையே? ஏன் இவர் வருந்துகிறார்?

Anonymous said...

//ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப...... முக்கியம், குடுமி இல்லாமல், காதுல பூ வைக்காமல் வாழப் பழகவில்லையா ? இதெல்லாம் வீட்டுக்கு வீடு வந்து யாரும் சொன்னாதால் பார்பனர்கள் விட்டொழித்தார்களா ?

பார்பனரின் ஆசிர்வாதத்துடன் பஞ்சாங்கம் மசுரு மட்டை எல்லாம் பார்த்து பார்த்து பாரதம் சுபிக்க்ஷ்ம் அடைந்து பசிபினி பஞ்சம் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்றுவாழ்கிறார்கள்...? போங்கடா பொழப்பத்தவனுங்களா.

வீ.ராஜகோபால், ஓய்வு பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மயிலாப்பூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: - என்னது....? ஆதிதிராவிட நல அலுவலராக இருப்பவர் மயிலாப்பூர் மாமாவா ? கெட்டுது போ ! நல்லா இருங்கடே. ஒருவேளை ஆதிதிராவிடர் என்று வைத்துக் கொண்டாலும் பழைய பஞ்சாங்கத்துக்காக யாராவது இவ்வளவு கவலை அடைவார்களா ? தினமலர் மாமா...! குடுமியை மறைங்கோ. ப்ளாகர்கள் மோசமானவர்கள். சட்டைக்குள் நெளிவதை கண்டுபிடித்துவிடுவார்கள்.
//

Wooooooowwwww great

:-)

Anonymous said...

Amazingggggggggggggggggg

Anna சுப்புடு Anna,

Give your spicy-thoght on Chikenguniya.CHO + MoDI meeting...
Awaiting

Anonymous said...

//பார்பனரின் ஆசிர்வாதத்துடன் பஞ்சாங்கம் மசுரு மட்டை எல்லாம் பார்த்து பார்த்து பாரதம் சுபிக்க்ஷ்ம் அடைந்து பசிபினி பஞ்சம் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்றுவாழ்கிறார்கள்...? போங்கடா பொழப்பத்தவனுங்களா.//

இது சூப்பர்!!