Tuesday, January 29, 2008

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா?

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா? அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், முதலில் தேசாபிமானம் என்றால் என்ன தெரியுமா ?

1. இந்தியா, இந்து இந்துராஷ்டரம் பற்றி தெரிந்த இந்தியராகவும் இந்துவாகவும் இருக்க வேண்டும்.

2. இந்தி வாழ்க, இந்தியை எதிர்த்ததால் தமிழ்நாடு தனித்து நின்றுவிட்டது என்ற தேசிய அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

3. மோடி அல்லது அத்வானி போன்ற இந்துக் கடவுள்களின் கலர்படம் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் அல்லது அலுவலக மேசையில் வைத்திருக்க வேண்டும்

4. சமஸ்கிரதம் இந்தியாவின் பொது மொழி என்றும் அது மட்டுமே கோவில் அர்சனைக்கு உபயோகிக்க வேண்டும் என்பதை ஊடகங்கள் வழியாக அது பற்றி தெரியாதவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

5. இலங்கை தமிழர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை தனித்தனியாக பிரித்து புரிந்து கொண்டு தெரியாதவர்களுக்கு சொல்ல வேண்டும், அதற்கு அடிக்கடி நீங்கள் துக்ளக்கும் தினமலரும் படிக்க வேண்டும். குறிப்பாக விடுதலை புலிகள் பற்றி எவரும் ஆதரவாக பேசினால் தேச துரோகி என அவரைப்பற்றி எச்சரிக்கை செய்து இந்திய அரசை விழித்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

6. ஈவெராமசாமி பற்றி தெரிந்திருக்க வேண்டியதில்லை, அவருடைய சாதி நாயக்கர் என்று தெரிந்தாலே போதும்.

7. கருணாநிதியும் கருணாநிதி குடும்பமும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக அடிக்கடி பலருக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

8. நாற்பது ஆண்டுகால திராவிடர் ஆட்சியில் தமிழகம் பின் தங்கிவிட்டது என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

9. துலுக்கர்களை சிறுபான்மையினர் என்று புரிந்து கொண்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு என்று அரசாங்கம் பேச்சு எடுத்தாலே அபாய சங்கு வாசித்து, பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறைவதாக அக்கறைபட்டுக் கொள்ளவேண்டும்.

10. இட ஒதுக்கீடு இந்தியரின் திறமையை குறைத்துவிட்டது, தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் அனைவரும் அனைத்தையும் பெற வேண்டும் என்று சொல்லத் தெரியவேண்டும். அதாவது, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற சமத்துவம் பேஷ தெரிந்திருக்க வேண்டும்

12. கடவுள் சேவை செய்யும் வகுப்பினர் குறிப்பாக பார்பனர் கடவுளுக்கும் மேல் என்று தெரிந்து கொண்டு அவர்கள் செயலில் குறிக்கிடாமல் இருக்க வேண்டும்.

13. கோவில் என்பது தனிமனிதரின் சொத்து அல்ல, அதற்கு என்றே ஆகம வரை முறை இருக்கிறது, அதை மதித்தாலே போதும், மாற்றம் வேண்டும் என்று எவராவது கேட்டால், அதெல்லாம் மாறப்படாது, இப்போது இருக்கும் நடைமுறையே சரி ஆண்டவனும் இதைதான் விரும்புகிறார். மாற்றினால் ஆண்டவனுக்கு ஆகாது, அடுக்காது, சுனாமி வரும், பூகம்பம் வெடிக்கும் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

14. தமிழில் அர்சனை என்று எதாவது மூதேவிகள் வந்து நின்றால் ஆண்டவனுக்கு எல்லா மொழிகளும் புரியும், தமிழென்ன? சமஸ்கிரதமென்ன? ஆனால் சமஸ்கிரத்தில் செய்வது தான் ஆண்டவனுக்கும் ஆச்சாராத்துக்கும் நல்லது, ஆண்டவனுக்கு பல மொழி தெரிந்தாலும், ஆண்டவனுக்கு அவன் பாஷையில் பேசினால் அவனுக்கு உகந்ததாக் இருக்கும் என்று எவரும் கேட்டால் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

15. இந்து மதத்துக்கு விரோதமாக எவரும் பேஷினால் அவர்களை இந்திய துரோகி, இன துரோகி என்று அடையாளம் காட்ட வேண்டும்.

16. மோடி போன்ற பெரிய மனிதர்கள் வருகை தரும் போது அது பற்றிய முழுகவரேஜ் செய்து அவர்களின் புகழை பரப்ப வேண்டும்.

17. வந்தேறிகள் என்று எவரும் பேஷினால், அப்படி யாரும் இல்லை, அது கிறித்துவ மிஷனரிகளின் சதி என்று சொல்லிவிட்டு திராவிடர்கள் தான் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தேறினார்கள் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

18. கோத்ரா ரயில் எரிப்பு பற்றி எவரும் கேட்டால், டீசல் டாங் வெடித்து ரயில் எரிந்ததாகவும் மோடியின் அரசு எவ்வளவோ போராடியும் முஸ்லிம்களை அல்லா அழைத்துக் கொண்டதை தடுக்க முடியவில்லை என்ற உண்மையை உறக்கச் சொல்லவும், இறைவன் மோடி மீது பழிச்சொல்லாக சொல்லப்படுவது, காங்கிரஸ் ஏஜெண்ட் தெகல்காவின் திட்டமிட்ட சதி என்று சொல்லத் தெரிய வேண்டும்.

19. ஆண்டி சோனியாவை ஆணடினோமெய்னோ, இத்தாலிகாரி, கிறித்துவர்களின் கைக்கூலி என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

20. லோக குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரிய பெரியவாளின் புகழை அகில லோகத்துக்கும் பரப்பவேண்டும்.

22. தேசம், தேசியம் தேசநலன் என்ற வார்த்தையை அவ்வப்போது உபயோக படுத்த வேண்டும்.

21. இதில் ஒன்றிரண்டை செய்தும், மேற்கண்ட எல்லாவற்றையும் போற்றி அடிவருடும் அடியார்களை கண்டு கொண்டு அவர்களை தட்டிக் கொடுத்து பேஷ வேண்டும்.

இன்னும் 100 எழுதாலம். யாருக்கு தேசவிசுவாசம் இருக்கிறது? இதையெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள், எல்லோரும் நாத்திக நாயகரின் துர்போதனையிலும், திராவிட கம்யூனிசத்தின் கெட்ட சவகாசத்திலும் இருக்கிறார்களே என்று நொந்து கொள்ள வேண்டி இருக்கிறது, அலுப்பாக இருக்கிறது. கடைசியாக,

மேற்கண்ட இருபத்து சொச்சம் பாயிண்டையும் ஒருவர் செய்து தான் தேசாபிமானியாக இருக்க வேண்டுமா? இல்லை. இல்லை. ஒரு சுலப பாதை இருக்கிறது. எட்டாம் ஆம் நம்பர் நூலை வாங்கி மூன்று புறிகளாக்கி தோளைச் சுற்றி மார்பு வழியாக இடுப்பின் குறுக்கில் சுற்றிக் கொண்டால் போதும், மேலே சொன்னவை எல்லாம் தன்னாலேயே நடக்கும், அதன் பிறகு நீங்கள் தேசாபிமானிதான்.

உடனே அது இல்லாதவர்கள் எல்லோரும் அணிந்து தேசாபிமானி ஆகப்போகிறேன் என்கிறீர்களா? முப்புறி நூல் எல்லோரும் அணிய முடியுமா? அதற்கே உள்ள மகிமை தான் என்ன? துர்அதிர்ஷட வசமாக நினைத்த மாத்திரத்தில் எல்லோரும் அணிய முடியாது. குலம் கோத்திரம் இவை எல்லாம் இருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் தேசாபிமனியாக முடியாது. பூனூல் அணிபவர் எவரோ அவர்களே தேசாபிமானிகள், மற்றவர்கள் தேசதுரோகிகள்.

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா?

9 comments:

Anonymous said...

சார்! நான் பதிலே சொல்லமாட்டேன். நாட்டை விட்டே ஓடலாம் என நினைக்கின்றேன்.


புள்ளிராஜா

said...

நான் உப்பு போட்டு சாப்பிடுகிறவன் , நான் தேச துரோகியே !

Anonymous said...

தெய்வமே! எங்கயோ போயிட்டேள்!

Anonymous said...

நான் தேசாபிமானி..

முதுகு மேலே கை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

Anonymous said...

தெய்வமே, நானும் இன்று முதல் பூனூல் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். எனக்கு அந்த "பாக்கியம்"கிட்டுமா???????????????????????

Anonymous said...

//தெய்வமே, நானும் இன்று முதல் பூனூல் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். எனக்கு அந்த "பாக்கியம்"கிட்டுமா???????????????????????//

கருப்புப் பாப்பானுங்க திருட்டுத்தனமாக பூனூல் போட்டுக் கொண்டு தேசாபிமானிகள் ஆனதும் உமக்கும் அந்த ஆசை வந்துவிட்டதா ஓய்.

Anonymous said...

நான் மட்டும் என்ன மணி ஆட்டுறவனா? நானும் தேசத் துரோகி தான். நீங்க சொல்றத பாத்தா இனிமேல் தேச துரோகின்னு சொல்லிக்கிறது தான் பெருமை போல இருக்கே. இல்லாட்டி என்னையும் ஓசில உண்டி வளக்கிற பன்னாடன்னு இல்ல சொல்லிருவாங்க

said...

நான் தேசத் துரோகிதானுங்கோ

said...

பார்ப்பன பண்ணாடைகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட, எங்க பாட்டன் முப்பாட்டன் மேல் சத்தியமாக சொல்கிறேன் நானும் தேசத்துரோகிதான்.

சம்பூகன்