Monday, March 17, 2008

பிரபலங்களின் விமர்சனம் : இந்த 'வியாதிக்கு' மருந்து கண்டுபிடிக்கவில்லை.

மூன்று வயதில் ஞானப்பால் குடித்து பாடினாராம் சம்பந்தர், இங்கு பிரபல எழுத்தாளன் என்ற போர்வையில் மனப்பால் குடித்துக் கொண்டு எவரையும் இகழமுடியும் என்பதை ஓனான்கள் கூட மெய்பித்து வருகின்றன.

முதலில் பிரபல எழுத்தாளன் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். நீ நீங்கள் ஒரு எழுத்தாளன் என்றால் எங்கேயோ படித்த 100 புத்தகங்ளின் மேட்டர்களை உங்கள் மொழிக்கு மாற்றி உங்களால் எழுத்தப்பட்டவையாக ஒரு பத்து புத்தகங்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு அல்லக்கைகளை தயார் செய்து, இவை எல்லாம் ஒரே இரவில் எழுதி முடிக்கப்பட்டவை, பின்னவினத்துவமும் பினாயிலும் கலந்து எழுதப்பட்ட இத்தகைய சிலாக்கியங்கள் இதுவரை தமிழ் புதினாவில் வந்ததில்லை என்று அல்லக்கைகளை வைத்து ஊடகங்கள் தோறும் வதந்தி (வாந்தி அல்ல) எடுக்க வேண்டும். அதன் பிறகு நீ, நீங்கள் ஒரு பிரபல எழுத்தாளன் தான்

அதாவது "ஆகா, அவரது எழுத்துக்களைப் பார்த்தீர்களா ? ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரும், அரேபியாவில் ஷேக்குகளும் படைக்கும் இலக்கியங்களெல்லாம் ஒத்தை ஆளாக நின்று படைத்துக் கொண்டு தமிழுக்கு தாடியாக ஆக்கி வைத்திருக்கிறார். இவரல்லவோ எழுத்தாளர். மற்றவர்கள் எல்லாம் எழுதுவது இலக்கியமா, பேனா பிடிப்பவன் எல்லாம் எழுத்தாளானா ? மாற்றி கொள்ளுங்கள் ஐயா, மாற்றிக் கொள்ளுங்கள். நவீனம், பெளதீகம்
இதெல்லாம் கலந்தும், கக்கா போவதிலும் வெரைட்டி கண்டுபிடித்து அதை கதையில் திணிக்க வேண்டும் அவனே எழுத்தாளன். அப்படி எழுதும் ஒரே எழுத்தாளுமையாளன் எங்கள் சோ அண்ட் 'சோவின்' வகையறா ஆளுதான் தான் என்று பரப்பிவிடவேண்டும்.

அப்படி ஒரு கூட்டம் சேர்த்துவிட்டால் அந்த எழுத்தாளான் தான் ஒரு பிரபலம் என்ற போர்வையில் எவர் மீது வேண்டுமானாலும் ஒண்ணுக்கு அடிக்கலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி என்று குறிப்பு கொடுத்து சிறுகதை எழுதுபவர்களை கிண்டல் அடிக்க வேண்டுமா ?

"ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தேன், ஆழயோசித்தேன்...அந்த நேரத்தில் தலைக்கு மேல் காக்காய்..." என்று ஆரம்பித்து கோவணத்தை இறுக்கி முடிந்து கொண்டு எழுதுங்கள், உங்கள் பெயர் ஒரே வார இதழ்மூலம் பிரபலமாகிவிடும் என்று குறிப்பு எழுதி கிண்டல் அடிக்கலாம்

புதுக்கவிதை எழுதுபவர்களை கிண்டல் அடிக்க,

"மூளையைக் கசக்கினேன்,
மூக்கில் ஒழுகியது - அறிவூற்று
முக்கிப் பார்க்கும் போது
மூச்சை அடைத்தது - துர்நாற்றம்
"


சூப்பர் கவிதை, இதுப்போல் எழுதினால் போதும், கூடவே இயலாமை, புண்ணாக்கு, தலித்தியம், நாரசம், நரமாமிசம் எல்லாம் சேர்த்துக் கொண்டால் புதுசு புதுசு புதுக்கவிதைதான்

பின்பு

தொடர்கதை எழுத்தாளர்களை எப்படி கிண்டல் அடிப்பது,

"அவள் அவனைப் பார்த்தாள், அவன் அவளின் தொடையைப் பார்த்தான்..." தொடர்கதையை இப்படித்தானே தொடங்க வேண்டும்.

ஐயா சாமி தாவு தீறுதா?......பிரபலமெல்லாம் இப்படித்தான் வளரும் எழுத்தாளர்களை விமர்சனம் செய்யனும்

இந்த பிரபல எழுத்தாளர்களெல்லாம் முலைப்பால் குடித்தவுட்டு முக்கி விழுவது கூட எழுத்தாக மாறி புதினம் படைக்கிறதாம். மற்றவர்கள் எல்லோரும் மண்டிபோட்டு மண்டையை உடைத்து எழுதுறாங்க, போங்கடா நீங்களும் உங்க விசம விமர்சனங்களும்.

இதுக்கும் ஜெமோ எழுதிய நீங்களும் புதுக்கழுதை வளர்க்கலாம் என்பதற்கும் சம்பந்தம் இல்லை

Wednesday, March 12, 2008

என் கூட்டாளி தாத்தாச்சாரியார் - சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும்

வயசானவர்களுக்கு யார் நண்பராக இருக்க முடியும்? என் பால்ய சினேகிதன் தாத்தாசாரியார், தில்லை அந்தணர்களை அம்பலத்தில் ஏற்றி இருக்கார் பாருங்க.

'போலீஸாரையும் தேவாரம் பாட வந்த ஓதுவார்களை யும் நெய்யையும் எண்ணெயையும் வாரி ஊற்றி ஓடஓட விரட்டிய இந்தத் தீட்சிதர்கள் யார்?' என்று வேத மேதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் சொல்கிறார்,

வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டதுதான் ஆகமம். அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத்ர ஆகமம், வைகானஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்துக்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை, அதாவது வழிபாட்டு முறையை புறக்கணிச்சிட்டு, 'வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்'னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

தீட்சிதர்கள் என்ற சொல்லுக்கு தீட்சை பெற்றவர்கள் என்று அர்த்தம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பூஜை செய்யும் பட்டாச்சாரியார்களுக்கும் தீட்சிதர்கள் என்ற பட்டம் உண்டு. அவர்கள் ஆகம தீட்சை பெற்றவர்கள். ஆனால்,

இந்த தீட்சிதர்களோ வேத தீட்சை பெற்றவர்கள். அதாவது தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட வர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள் இந்த தீட்சிதர்கள். அவர்களுக்கு தாங்கள்தான் 'ஒரிஜினல் பிராமணர்கள்' என்ற எண்ணம் உண்டு.

இந்த தீட்சிதர்களது ஆகமம் அல்லாத வைதீக வழிபாடு சிதம்பரத்தில் மட்டு மல்ல, ஆவுடையார்கோயில், காஞ்சிபுரம் காமாட்சி கோயில் ஆகிய இடங்களிலும் நடக்கிறது. ஆனால், அவர்களெல்லாம் சிதம்பரம் தீட்சிதர்களைப் போல இவ்வளவு தீவிரமாக இல்லை.

வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியதுதான் ஆகமம். ஆனால், வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் முதலானவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருவதுதான் தீட்சிதர்களின் வழிமுறை.

வேதம் சொன்ன யாகங்களில் முக்கியமானது பலிபொருட்கள். அதாவது மாடுகள், ஆடுகள், குதிரைகள் ஆகியவற்றை பலி கொடுக்க வேண்டும். அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்றுவரை பசுக்களை பலி கொடுக்கும் சோம யாகம் முதலானவற்றைச் செய்துவர வேண்டும் என்பது ஐதீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. 'வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும் வேதம் சொன்ன வடமொழியில்தான் இருக்க வேண்டும்?' என்று சொல்லித்தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள். இன்னும் ஒரு சங்கதி தெரியுமோ?

சைவ ஆகமத்தில் லிங்க வழிபாடு மிகவும் முக்கிய மானது. ஆனால், வேத வழிபாட்டை பின்பற்றும் சிதம்பரத்தில் லிங்கத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. பெரும்பாலான பக்தர்கள் கோபப்படக் கூடாது என்பதற்காகத்தான் சிதம்பரத்தில் சிவபெருமான் 'ஆகாச லிங்கமாக' இருப்பதாக... அதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். மக்களும் நம்பிவிட்டனர். லிங்கத்தைவிட நடராஜர்தான் அங்கே முக்கியம். 'நடராஜ மகாத்மியம்' என்றொரு புஸ்தகத்தை எழுதியிருக்கார் ஒரு தீட்சிதர். அதில், 'சிவபெருமான் நடனப் போட்டியில காளி தேவியைத் தோற்கடிக்க வழி தெரியாமல் தன் இடக்காலை உயரே தூக்கி சங்கடப்படுத்தினார். காளியும் வெட்கப்பட்டு, ஆட்டத்திறன் அதனால் பாதிக்கப்பட்டு, நடராஜர் ஜெயித்தார் என்று கதையே உண்டு.

அதாவது சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் பாஷையான தமிழை முற்றாக மறுதலிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களின் கொள்கை. இவர்களைப் போய், 'தில்லைவாழ் அந்தணர்கள்'னு சுத்தத் தமிழில் அடைமொழி போட்டு யார் கூப்பிட்டதோ...'' என்று பொருள் பொதியச் சிரித்தார் தாத்தாச்சாரியார்.

நன்றி:
கட்டுரை : ஜூனியர் விகடன் 12/மார்/2008
படம் : anyindian

Thursday, March 6, 2008

சுஜாதா மறைவு பாரதிக்கு இழப்பு !

தமிழ் என்றாலே 21 ஆம் நூற்றாண்டில் நினைவுக்கு வரும் பெயர் பாரதி, பாரதிப் போல் புலவன் இல்லை. பார்த்தனைப் போல் வீரன் இல்லை. அப்படிப்பட்ட பாரதிக்கு உலகம் தோறும் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கிறார்கள். பாரதி சங்கம் இல்லாத நாடே இல்லை.

கடந்த 40 ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகை தன் எழுத்தாற்றலால் கட்டிப் போட்ட ஒரே எழுத்தாளர் சுஜாதா மட்டுமே, மற்றவர்கள் எல்லோரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள எழுதினார்கள். சுஜாதா மட்டுமே அவரது எழுத்தால் அடையாளம் காணப்பட்டார், பின்பு அவரது அடையாளமே இலக்கியம் என ஆயிற்று.

உலக தமிழார்வளர்கள் அனைவரும் பாரதி தமிழ்ச் சங்கம் போல், சுஜாதா அவர்களின் பெயரிலும் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து தமிழை வளர்க்கலாம். ஒரே ஒரு கஷ்டம் தான் பாரதி சங்கம் பாதியாக குறைந்து போகும். உவேசா ஐயர் முதல் - பாலச்சந்தர், எஸ்வேஷேகர் வரை பார்பனர்களின் தமிழ்ச் சேவை மிகப் பெரியது.

வாழ்க பாரதி புகழ் ! வாழ்க சுஜாதா அவர்களின் புகழ் !

Sunday, February 24, 2008

2007ன் சிறந்த வலைப்பதிவாளர்.

2007ல் மொக்கை மன்னர்கள் கோலோச்சினார்கள், சுப்புடுவாகிய நான் 2006ல் இருந்தே பதிவுகளை படித்துவருகிறேன். இருங்க, 2006ல் ஸ்டார் பதிவர் யார் என்று தெரியுமா ? தெரிஞ்சா பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை. 2007ல் ஏன் ஸ்டார் பதிவர் செலக்சன் நடக்கவில்லை. காரணம் இருக்கு. ஒரு பதிவர் ஸ்டார் பதிவர் ஆக அடிப்படை தகுதி என்று ஒன்று உண்டு, அதன் படி அவர் போலிக்கு தெரிந்தவனாக இருக்கனும்ம், தெரிஞ்சவனாக இருந்தால் மட்டும் போதாது, போலிக்கு சக பதிவர்களின் மனைவி மகளைப் பற்றி ஆபாசமாக எழுதித் தரனும், அதையும் அலுவலக முகவரியில் இருந்தே தந்திருந்து அந்த சான்றிதழை போலி அவன் பதிவில் வெளி இடனும், அதன் பிறகுதான் ஸ்டார் பதிவர் அறிப்பை செய்ய முடியும், இதெல்லாம் இல்லாமலே ஒருவர் ஸ்டார் பதிவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டாரே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் போலிக்கு அல்லக்கையாக செயல்பட்டார் என்ற முதல் தகுதியே சிறப்பு தகுதியாக கருதி ஸ்டார் அவார்டு வாங்கிட்டார். 2007க்கு யாருக்கு கொடுப்பது ?

2007ல் போலி எங்க போனான் என்றே தெரியல, அப்பறம் எப்படி அவனுக்கு அல்லக்கையாக செயல்பட முடியும்? எனவே 2007ன் சிறந்த ஸ்டார் பதிவர் யாரும் இல்லை.

போலி அண்ணா, திரும்ப வாங்க 2008ல் யாருக்காவது ஒருவருக்கு ஸ்டார் பதிவர் அவார்டு கொடுகணும்

Monday, February 4, 2008

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு....

இந்திய தேசிய அரசு ஒரு உத்தரவுப் போட்டா, அதை மதிச்சு நடக்கிறது தானே மாநில அரசாங்கத்தின் வேலை. நடுவன் அரசு, எஸ்.சி/எஸ்.டி சமூகத்தினருக்கு உதவித் தொகை வழங்குவதில் ஒரு சிறிய மாற்றம் செய்திருக்கிறது. அதை அப்படி மதித்து நடக்காமல், தான் தோன்றித்தனமாக, இந்த திராவிட திம்மிகள் தவ்வுகிறது.

அப்படி என்ன பெரிசா மாறுதல் செஞ்சிட்டா. அட்டவனை சாதி மக்களுக்கு, கல்லூரியில் நுழைந்துப் படித்தாலே, உதவித் தொகை என்று இருந்ததை, 60% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, உதவித் தொகை என்று மாற்றியமைச்சியிருக்கா. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு. 60% என்று சொன்னால் தானே படிப்பார்கள். இல்லாவிடில் படிக்காமல் பணம் மட்டும் பெற்று சும்மாயிருப்பர்கள் அல்லவா.

அதுவுமில்லாமல், சிறப்பு தகுதிகள் இல்லையே. உன்மையான மைனாரிட்டியாக ( அதாவது 3% மொத்த ஜனத்தொகையில் ) இருந்தால் தானே அது கொடுக்கப்படனும்.
அதில் ஒரு உள்ளார்ந்த உன்னதமான நோக்கம் இருக்கு என்பது தமிழகத்தின் நிரந்திர தலைவலி, ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் தெரியும். காங்கிரஸ்காரா எல்லாம், அவ அவா சண்டையில் மும்மரமா இருக்கா. அதுனாலே, அவ வழக்கம் போல ஒதுங்கிடுவா.
இந்த மாற்றம் அறிவித்தவுடன், உடனடியாக கருணாநிதி, இதை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். தமிழகத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்று அறிவிக்கிறார். படிக்க வந்துள்ள தாழ்த்தப்பட்டுள்ள சமுதாய மாணவர்களின் கண்களைக் குத்தும் மோசமான முயற்சி என்று வீரமணி சொல்லுறார். வை கோ, மத்திய அரசு, இந்த உத்தரவை மீட்டுக்கொள்ள வேண்டுகோள் வைக்கிறார். கம்பூனிஸ்ட் கட்சிகள், இது அந்த மக்களுக்கு இழைக்கப்ப்டும் துரோகம் என்று அலறுகிறது.

ஆனால், நம்மாத்து பொம்மனாட்டி, ஜெயலலிதா, அதை எல்லாம், சட்டை செய்யவே இல்லை. அவருக்குத் தெரியும். எது மக்கள் பிரச்சனை. அன்பழகன் உதவிப் பேராசிரியரா, இல்லை பேராசிரியாரா என்பதற்கு விடை கண்டுப்பிடிப்பது தானே முதல் வேலை. அதை விடுத்து, இது மாதிரி விசயங்களில் தலையிடலாமா. இது வரை, ஜெயலலிதா தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதாக யாராவது நிருபிக்க முடியும்மா. முடியாது. அந்த தப்பை அவர்கள் செய்யவே மாட்டார்கள்.

இந்திய இறையான்மைக்கு சவால் விடும், கருனாநிதி நடுவன் அரசின் ஆனையயை மதிக்கத் தவறியதற்காக, ஆட்சியயை கலைக்க முடியும்மா என்று யோசித்து வருகிறார். அதனால், அந்த உன்னதமான காரணத்தை, மக்களுக்கு அறிவிக்க முடியாது சூழ்நிலையில் இருக்கிறார். அது நீசர்களுக்குச் சொன்னாலும் புரியாது.

ஜெயலலிதா நினனப்பதைச் செய்யும், உலக அறிவாளி சோ, மாரி போல் கருத்துக்களைப் பொழிபவர். அவர் கூடிய விரைவில் தனது கேள்வி பதிலில் இதற்கான சப்பைக் கட்டு, கட்டுவார் என்று எதிர்பாருங்கள்.

Sunday, February 3, 2008

கிச்சு மாமாவுக்கு ஆரிய 'நச்' கேள்விகள்.

கிச்சுமாமா உள்ளங்கையை தேய்து சொல்கிறார், "தேவபாசையும், தமிழும் ஆதிகாலத்து பாஷைகளாம், இரண்டிற்கும் பொதுவான அம்சம் என்பது போல் தேவ ரிஷிகளின் பெயர்கள் இரண்டு பாஷைகளின் பொத்தகங்களிலும் உள்ளதாம், வெள்ளைக்காரன் ஆரியர் திராவிடர் என்று பிரித்து போட்டுவிட்டு பிராமனாளுக்கும், மத்தவாளுக்கும் பேதம் பிரிச்சு வச்சிட்டான்"

மாமாவுக்கு சில கேள்விகள்.

வெள்ளைக்காரன் எத்தனை 'ஆரிய' பவன்களை திறந்து வைத்து பெயர் வைத்தான்?
வெள்ளைக்காரன் எங்கே எப்போது 'ஆரிய' சமாஜ் என்ற பார்பன அமைப்பை தோற்றுவித்தான்?
வெள்ளைக்காரன் சூத்திரவாள் யார் ? ப்ராம்ணவாள் யார் என்று எப்போது பிரித்தான்?
வெள்ளைக்காரன் மனுவை அச்சிட்டு வீடுவிடாக கொடுத்தானா?
வெள்ளைக்காரன் ப்ராம்ணவாள் ப்ரம்மாவின் மூக்கில் இருந்து பிறந்தவராகவும், சூத்திரன் காலில் இருந்து பிறந்தவராகவும் எப்போது பிரச்சாரம் செய்தான்?

Tuesday, January 29, 2008

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா?

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா? அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், முதலில் தேசாபிமானம் என்றால் என்ன தெரியுமா ?

1. இந்தியா, இந்து இந்துராஷ்டரம் பற்றி தெரிந்த இந்தியராகவும் இந்துவாகவும் இருக்க வேண்டும்.

2. இந்தி வாழ்க, இந்தியை எதிர்த்ததால் தமிழ்நாடு தனித்து நின்றுவிட்டது என்ற தேசிய அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

3. மோடி அல்லது அத்வானி போன்ற இந்துக் கடவுள்களின் கலர்படம் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் அல்லது அலுவலக மேசையில் வைத்திருக்க வேண்டும்

4. சமஸ்கிரதம் இந்தியாவின் பொது மொழி என்றும் அது மட்டுமே கோவில் அர்சனைக்கு உபயோகிக்க வேண்டும் என்பதை ஊடகங்கள் வழியாக அது பற்றி தெரியாதவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

5. இலங்கை தமிழர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை தனித்தனியாக பிரித்து புரிந்து கொண்டு தெரியாதவர்களுக்கு சொல்ல வேண்டும், அதற்கு அடிக்கடி நீங்கள் துக்ளக்கும் தினமலரும் படிக்க வேண்டும். குறிப்பாக விடுதலை புலிகள் பற்றி எவரும் ஆதரவாக பேசினால் தேச துரோகி என அவரைப்பற்றி எச்சரிக்கை செய்து இந்திய அரசை விழித்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

6. ஈவெராமசாமி பற்றி தெரிந்திருக்க வேண்டியதில்லை, அவருடைய சாதி நாயக்கர் என்று தெரிந்தாலே போதும்.

7. கருணாநிதியும் கருணாநிதி குடும்பமும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக அடிக்கடி பலருக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

8. நாற்பது ஆண்டுகால திராவிடர் ஆட்சியில் தமிழகம் பின் தங்கிவிட்டது என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

9. துலுக்கர்களை சிறுபான்மையினர் என்று புரிந்து கொண்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு என்று அரசாங்கம் பேச்சு எடுத்தாலே அபாய சங்கு வாசித்து, பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறைவதாக அக்கறைபட்டுக் கொள்ளவேண்டும்.

10. இட ஒதுக்கீடு இந்தியரின் திறமையை குறைத்துவிட்டது, தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் அனைவரும் அனைத்தையும் பெற வேண்டும் என்று சொல்லத் தெரியவேண்டும். அதாவது, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற சமத்துவம் பேஷ தெரிந்திருக்க வேண்டும்

12. கடவுள் சேவை செய்யும் வகுப்பினர் குறிப்பாக பார்பனர் கடவுளுக்கும் மேல் என்று தெரிந்து கொண்டு அவர்கள் செயலில் குறிக்கிடாமல் இருக்க வேண்டும்.

13. கோவில் என்பது தனிமனிதரின் சொத்து அல்ல, அதற்கு என்றே ஆகம வரை முறை இருக்கிறது, அதை மதித்தாலே போதும், மாற்றம் வேண்டும் என்று எவராவது கேட்டால், அதெல்லாம் மாறப்படாது, இப்போது இருக்கும் நடைமுறையே சரி ஆண்டவனும் இதைதான் விரும்புகிறார். மாற்றினால் ஆண்டவனுக்கு ஆகாது, அடுக்காது, சுனாமி வரும், பூகம்பம் வெடிக்கும் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

14. தமிழில் அர்சனை என்று எதாவது மூதேவிகள் வந்து நின்றால் ஆண்டவனுக்கு எல்லா மொழிகளும் புரியும், தமிழென்ன? சமஸ்கிரதமென்ன? ஆனால் சமஸ்கிரத்தில் செய்வது தான் ஆண்டவனுக்கும் ஆச்சாராத்துக்கும் நல்லது, ஆண்டவனுக்கு பல மொழி தெரிந்தாலும், ஆண்டவனுக்கு அவன் பாஷையில் பேசினால் அவனுக்கு உகந்ததாக் இருக்கும் என்று எவரும் கேட்டால் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

15. இந்து மதத்துக்கு விரோதமாக எவரும் பேஷினால் அவர்களை இந்திய துரோகி, இன துரோகி என்று அடையாளம் காட்ட வேண்டும்.

16. மோடி போன்ற பெரிய மனிதர்கள் வருகை தரும் போது அது பற்றிய முழுகவரேஜ் செய்து அவர்களின் புகழை பரப்ப வேண்டும்.

17. வந்தேறிகள் என்று எவரும் பேஷினால், அப்படி யாரும் இல்லை, அது கிறித்துவ மிஷனரிகளின் சதி என்று சொல்லிவிட்டு திராவிடர்கள் தான் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தேறினார்கள் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

18. கோத்ரா ரயில் எரிப்பு பற்றி எவரும் கேட்டால், டீசல் டாங் வெடித்து ரயில் எரிந்ததாகவும் மோடியின் அரசு எவ்வளவோ போராடியும் முஸ்லிம்களை அல்லா அழைத்துக் கொண்டதை தடுக்க முடியவில்லை என்ற உண்மையை உறக்கச் சொல்லவும், இறைவன் மோடி மீது பழிச்சொல்லாக சொல்லப்படுவது, காங்கிரஸ் ஏஜெண்ட் தெகல்காவின் திட்டமிட்ட சதி என்று சொல்லத் தெரிய வேண்டும்.

19. ஆண்டி சோனியாவை ஆணடினோமெய்னோ, இத்தாலிகாரி, கிறித்துவர்களின் கைக்கூலி என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

20. லோக குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரிய பெரியவாளின் புகழை அகில லோகத்துக்கும் பரப்பவேண்டும்.

22. தேசம், தேசியம் தேசநலன் என்ற வார்த்தையை அவ்வப்போது உபயோக படுத்த வேண்டும்.

21. இதில் ஒன்றிரண்டை செய்தும், மேற்கண்ட எல்லாவற்றையும் போற்றி அடிவருடும் அடியார்களை கண்டு கொண்டு அவர்களை தட்டிக் கொடுத்து பேஷ வேண்டும்.

இன்னும் 100 எழுதாலம். யாருக்கு தேசவிசுவாசம் இருக்கிறது? இதையெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள், எல்லோரும் நாத்திக நாயகரின் துர்போதனையிலும், திராவிட கம்யூனிசத்தின் கெட்ட சவகாசத்திலும் இருக்கிறார்களே என்று நொந்து கொள்ள வேண்டி இருக்கிறது, அலுப்பாக இருக்கிறது. கடைசியாக,

மேற்கண்ட இருபத்து சொச்சம் பாயிண்டையும் ஒருவர் செய்து தான் தேசாபிமானியாக இருக்க வேண்டுமா? இல்லை. இல்லை. ஒரு சுலப பாதை இருக்கிறது. எட்டாம் ஆம் நம்பர் நூலை வாங்கி மூன்று புறிகளாக்கி தோளைச் சுற்றி மார்பு வழியாக இடுப்பின் குறுக்கில் சுற்றிக் கொண்டால் போதும், மேலே சொன்னவை எல்லாம் தன்னாலேயே நடக்கும், அதன் பிறகு நீங்கள் தேசாபிமானிதான்.

உடனே அது இல்லாதவர்கள் எல்லோரும் அணிந்து தேசாபிமானி ஆகப்போகிறேன் என்கிறீர்களா? முப்புறி நூல் எல்லோரும் அணிய முடியுமா? அதற்கே உள்ள மகிமை தான் என்ன? துர்அதிர்ஷட வசமாக நினைத்த மாத்திரத்தில் எல்லோரும் அணிய முடியாது. குலம் கோத்திரம் இவை எல்லாம் இருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் தேசாபிமனியாக முடியாது. பூனூல் அணிபவர் எவரோ அவர்களே தேசாபிமானிகள், மற்றவர்கள் தேசதுரோகிகள்.

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா?

Friday, January 25, 2008

பார்பனர்கள் மட்டும் தான் தமிழ் எதிரியா?

தை மாதம் முதல் திகதியை புத்தாண்டாக அறிவித்ததை தமிழர்கள் அனைவரும் வரவேற்கின்றனர். வழக்கம் போல் பார்பனர்கள் எள்ளி நகையாடுகின்றனர். தமிழன் என்றால் கிள்ளுக் கீரையாக நினைத்ததற்கு இணையத்தில் செருப்படி கிடைத்ததும் பார்பன கூட்டம் ஓடிப் சென்று பார்பன பாரதி பெயரில் ஒரு ஓசி திரட்டியை வைத்துக் கொண்டுள்ளது. அதில் ஒரிஜினல் பெயரிலும் தமிழ்மணத்தில் போலி பெயரிலும் அதே பார்பன பண்ணாடைகள் தான் என்றும் வெறுப்புடன் உலா வருகின்றனர்.

இலவசமாக சாதுவேசம் போட்டு பினாத்தும் மற்ற பார்பனர்கள், இன்னும் தமிழை தூற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதியான முதலமைச்சர் கருணாநிதி யாரைக் கேட்டு அறிவித்தார் என்று கேட்கிறார்கள். லாரியில் ஏற்றினால் நான்கு பேர் குறைய இருக்கும் பார்பனர்களைக் கேட்டுக் கொண்டு தமிழ்சார்ந்த விசயங்களுக்கு கருணாநிதி முடிவெடுக்க வேண்டுமாம். சித்திரைக்கு ஓலமிடும் ஒரு பார்பனனின் அபத்த பதிவு ஒன்றில் தமிழ் அறிஞர்களை கிழம் கிட்டு என்று எழுதி திட்டி இருக்கிறான். அதற்கு ஆதரவு கொடுத்து ஒரு பார்பன பதிவர், ஜெயலலிதாவின் ஆடுகோழி திட்டத்திற்கு ஏற்பட்ட கெதி தான் தை 1 க்கும் ஏற்படும் என்று ஆசி வழங்கி இருக்கிறார். இவர் ஆன்மிக பதிவர் என்று தன்னைக் கூறிக் கொண்டு மிதவாத பார்பனீயம் கட்டிக்காப்பவர். ஜெயலலிதா இந்துத்துவ வெறியுடன் ஆடுகோழி வெட்ட தடை போட்டதை பொதுமக்கள் காறி உமிழ்ந்து பதிவியை விட்டே துறத்தினார்கள். அதற்கும் புத்தாண்டு அறிவிப்புக்கும் என்ன தொடர்பு ? பண்ணாடைகளே பதில் சொல்லுங்கள்.

தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுவனும் உவேசாமிநாத ஐயரும் ஒரு கிழவன் தான். மறை மலை அடிகளை கிழங்கிட்டு என்னும் போது பார்பனன் உவேசாமி நாதனை உங்களால் ஏன் கிழவன் என்று சொல்ல முடியவில்லை. அந்த கிழவன் தமிழை காப்பாற்றுகிறேன் என்ற போர்வையில் தமிழ்புலவர்கள் பார்பனர்களின் தகிடுதத்தங்களை சாடிய செய்யுளையெல்லாம் அழித்தான். பல செய்யுள்களை திருத்தினான். அதுதான் அவன் தமிழுக்கு செய்த சேவை. அவன் கிழம்கிட்டு இல்லையா ? பண்ணாடைகளே பதில் சொல்லுங்கள்.

சிதம்பரத்தில் தமிழ் பாடுவதற்கு எதிர்ப்பு, தமிழ் ஆண்டை மாற்றி அமைக்க எதிர்ப்பு, தமிழ் மந்திரத்திற்கு எதிர்ப்பு. அப்பறம் ஏண்டா நாங்களும் தமிழர்கள் என்று கூறிக் கொள்கிறீர்கள். தமிழ்தான் உங்க கூட்டத்திற்கு பிடிக்கவில்லையே அப்பறம் ஏண்டா தமிழில் வந்து வாந்தி எடுக்கிறீர்கள். பதில் சொல்லுங்கடா பண்ணாடைகளா.

பார்பனர் சுயநல நோக்கோடும், துவேசமாகவும் சொல்லும் அறிவுரைகளை புறந்தள்ளுவோம், தினமலர் என்ற பார்பன ஏட்டில் பெரியாரை ஈரோட்டு குருகுலம் என்று குத்தி இருக்கிறது. குருகுலம் என்ற பெயரில் காமக் கூடம் நடத்திக் கொண்டிருக்கும் ஊத்தவாயன் இருள் நீக்கி சுப்பிரமணியின் குருகுலத்தைவிட உலகத்தில் சிறந்த குருகுலம் உண்டா ?

ஊடகங்கள் இல்லாத காலத்தில் பரப்பிய பொய்யை தற்போது பரப்ப முடியவில்லையே என்பதால் பார்பனர் கடுப்புடன் இருக்கின்றன. தமிழன் என்ற போர்வையில் அறிவுரையும் கருத்தும் சொல்ல வரும் பண்ணாடைகளின் எழுத்துக்களை பார்த்தால் சிரிக்கவே தோன்றுகிறது. இப்பொழுது புரிகிறதா ? பார்பனன் மட்டும் தான் தமிழ் எதிரி.

~~~~~~~~~~~~~~~~~~~

குத்தாலம் குப்புசாமி என்ற வாசகர் இந்த கருத்தை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதை இடுகையாக இட்டுவிட்டேன். குப்புசாமி சார், பதிவு காரமாக இருக்கிறது. பதிவர்கள் ஆட்சேபித்தால் எடுத்துவிடுவேன். குப்புசாமி சார், கருத்துக்களை கொஞ்சம் ஆரோக்கியமாக சொல்லி இருக்கலாம்.

திரிஷாவிற்கு திரிசங்கு சொர்கத்திலும் இடம் கிடையாது.

தமிழ்நாட்டில் பிறந்த திரிஷாவிற்கு தமிழ் தெரியாமல் வளர்த்த திரிஷாவின் அம்மா, அப்பாவிற்கு என் வாழ்த்துக்கள். சம்ஸ்கிருதம் தெரியும்மோன்னோ..இல்லையின்னா என் வாழ்த்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

எனக்குப் பிடித்தது கடல் உணவு வகை என்று சொன்னதில் கூட எனக்கு வருத்தமில்லை. பெங்காலி பிராமனாள் எல்லாம், மீனை கத்திரிக்காய் போல சாப்பிடுவாங்க. ஏதோ டிவி பேட்டியில் கூடச் சொல்லியிருந்தா, தமிழே என் வாயில் வராது என்று, அப்போது தான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்போ என்னான்னா, ஏதோ படத்திலே, அவர்டுக்காக சொந்த குரலில் பேசுறாளாம். அதுக்கு தமிழ் கத்துக்கிட்டு தமிழிலே பேசுறாளாம்.

திரைப்படங்களில் வரும் நடிகைகளுக்கு கோவில் கட்டி புனிதப்படுத்தி வரும் தமிழ்நாட்டில், திரிஷா இப்படி ஒரு செயலைச் செய்யலாமா. அதை ஆங்கிலத்திலே எழுதி வைச்சு படிச்சிக்க வேண்டியது தானே. அதுக்காக தமிழ் படிக்கனும்மா என்ன. நீச பாஷை கத்துண்டு, பேஸினா, திரிசங்கு சொர்கத்தில் கூட இடம் கொடுக்கப்பிடாது என்று நான் ஷபிக்கிறேன்.

தினமலரின் கவலை - பஞ்சாங்கம் "நாட்டுடமை" ஆகுமா?

வீ.ராஜகோபால், ஓய்வு பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மயிலாப்பூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்:

தீபாவளி, பொங்கல் பண்டிகை, தமிழ் வருடப் பிறப்பு எல்லாம் பஞ்சாங்கப்படி, நாள், நட்சத்திரம் பார்த்து, இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள். "பஞ்சாங்கம் பார்க்க மாட்டோம்' என பகுத்தறிவாளர்கள் கூறினாலும், ஜோதிடர்கள் கணித்த பஞ்சாங்கப்படி தானே பொங்கல் வருகிறது. பஞ்சாங்கம் என்றால், வருடம், மாதம், நாள், நட்சத்திரம், திதி என்ற ஐந்து அங்கங்கள் கொண்டது. சூரியன் (ஞாயிறு), சந்திரன் (திங்கள்), செவ்வாய் (அங்காரகன்), புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகிய கிரகங்கள் விண்வெளியில், 12 ராசி மண்டலங்கள் வழியாக சஞ்சாரம் செய்கின்றன என்பதை அடிப்படையாக வைத்தே ஜோதிட நிபுணர்கள் பஞ்சாங்கங்களை கணிக்கின்றனர். ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும், தை மாதம் முதல் தேதியன்று பொங்கல் பண்டிகை என்று பஞ்சாங்கம் ஏன் சொல்கிறது? அதுவரை தனுசு ராசியில் இருந்த சூரியன், தை முதல் நாள் அன்று மகர ராசியில் பிரவேசிக்கிறார். ஆகவே தான், இந்தியாவெங்கும் இந்துக்கள் தை முதல் நாளை, "மகர சங்கராந்தி' என்று கொண்டாடுகின்றனர். அது உத்தராயணம் தொடங்கும் புண்ணிய தினமும் ஆகும். மகர ராசியில் பிரவேசிக்கும் சூரிய பகவானுக்கு, தமிழகத்தில் மக்கள் பொங்கல் வைத்துப் படைப்பதால், அதற்கு பொங்கல் என்று பெயர். இதனால் தான் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு மகர சங்கராந்தி அல்லது பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.பகுத்தறிவு வாதம், ஈரோட்டு குருகுலம் பிறப்பதற்கு பல நுõறு ஆண்டுகள் முன்பிருந்தே, தமிழ் வருடப் பஞ்சாங்கங்கள் பொங்கல் பண்டிகை வரும் நாள் பற்றி கூறி வருகின்றன. ஆகவே, காலம் காலமாக பஞ்சாங்கம் பார்த்து இந்துக்கள் கொண்டாடி வரும் பொங்கல் , மகர சங்கராந்தி புண்ணிய நாளை, இப்போது பகுத்தறிவுக்காரர்களும் ஏற்றுக் கொண்டு, "தமிழர் திருநாள்' என்று விழா எடுப்பது வரவேற்கத்தக்கதே. தை மாதம் முதல் நாள் தான் தமிழரின் புத்தாண்டு என விரைவில் அறிவிப்பு வரும் என்றால், இந்தப் பங்குனி முடிந்து, சித்திரையில் வெளிவர இருக்கும் சர்வதாரி பஞ்சாங்கங்களுக்கு அரசாங்கம் தடை விதிக்குமா? சித்திரை மாதம் முதல் அடுத்த மார்கழி முடிய சர்வஜித்து ஆண்டு தான் என்றும், சர்வதாரி பஞ்சாங்கம் அடுத்த தை மாதம் அதாவது ஆங்கில 2008ம் ஆண்டு தொடங்கி 2009ம் ஆண்டு மார்கழி வரை நீடிக்கும் என அரசாங்கம் ஆணை பிறப்பிக்குமா? பிறப்பித்தால் அது சட்டப்படி செல்லுமா? தமிழ்வருடப் பஞ்சாங்கங்கள் தயாரிக்கும் ஜோதிடர்களும், பஞ்சாங்கம் பார்க்கும் மக்களும் இதை ஏற்றுக் கொள்வார்களா அல்லது தமிழக அரசே பஞ்சாங்கம் தயாரிப்பதை நாட்டுடைமை ஆக்கி, "தை மாதம் முதல் மார்கழி வரையிலான தமிழ் ஆண்டு' எனப் புதிய முறையில் பஞ்சாங்கங்கள் தயாரித்து விற்பனை செய்வார்களா? ஒன்றும் புரியவில்லை.
___________________

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப...... முக்கியம், குடுமி இல்லாமல், காதுல பூ வைக்காமல் வாழப் பழகவில்லையா ? இதெல்லாம் வீட்டுக்கு வீடு வந்து யாரும் சொன்னாதால் பார்பனர்கள் விட்டொழித்தார்களா ?

பார்பனரின் ஆசிர்வாதத்துடன் பஞ்சாங்கம் மசுரு மட்டை எல்லாம் பார்த்து பார்த்து பாரதம் சுபிக்க்ஷ்ம் அடைந்து பசிபினி பஞ்சம் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்றுவாழ்கிறார்கள்...? போங்கடா பொழப்பத்தவனுங்களா.

வீ.ராஜகோபால், ஓய்வு பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மயிலாப்பூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: - என்னது....? ஆதிதிராவிட நல அலுவலராக இருப்பவர் மயிலாப்பூர் மாமாவா ? கெட்டுது போ ! நல்லா இருங்கடே. ஒருவேளை ஆதிதிராவிடர் என்று வைத்துக் கொண்டாலும் பழைய பஞ்சாங்கத்துக்காக யாராவது இவ்வளவு கவலை அடைவார்களா ? தினமலர் மாமா...! குடுமியை மறைங்கோ. ப்ளாகர்கள் மோசமானவர்கள். சட்டைக்குள் நெளிவதை கண்டுபிடித்துவிடுவார்கள்.

Sunday, January 20, 2008

மோடி இஸ்லாமியர்களின் நண்பன் - மறைக்கப்பட்ட உண்மைகள்.

ரவி சந்தோஷ் என்ற நண்பர், துக்ளக் ஆண்டுவிழாவுக்கு சென்று வந்தாராம், அவர் சொந்தமாக பதிவு வைத்திருக்கவில்லை. என்னுடன் சாட்டில் தொடர்பு கொண்டு துக்ளக் ஆண்டுவிழா செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
_________________________________

ஸ்ரீமான் நரேந்திர மோடியின் ஹிந்து ஆதரவு பேச்சினைக் கேட்க திங்கட்கிழமை ஐந்தாயிரம் பேர் சென்னையில் திரண்டு இருந்தார்கள். எல்லோரும் குறைந்த அளவு அவருக்காக 40மணி நேரம் காத்திருந்து அவரின் பேச்சைக் கேட்டார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. இதைத்தவிர இன்னும் பல்லாயிரக் கணக்கான ஹிந்து மக்கள் கொலைஞரின் திராவிட பாசிச செக்யூரிடி மற்றும் உடன்பிறப்பு கூட்ட கெடுபிடிகளுக்கு பயந்து ஆசையிருந்தும் வருவதை தவிர்த்தார்கள்..
இதனை எதிர்த்து, தெருவுக்குதெரு உண்டியல் குலுக்கும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் கமிஷனர் ஆபீஸ் அருகில் நடந்தது. அதற்கு வெறும் 40 பேர்தான் வந்திருந்தனர். முஸ்லிம் ஐக்கிய அணியினர் ஆயிரம் விளக்கு மசூதி அருகில் திரண்டனர் மொத்த எண்ணிக்கையே வெறும் 160 பேர்.

தமிழக இஸ்லாமிய தவ்ஹீத் ஜமாத் கூட்டிய ஒப்பாரிக்கு திரண்டவர்கள் மொத்தம் 25 பேர்.
இவையெல்லாம் கொலைஞரின் திராவிட பாசிச ஆட்சியின் போலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட அபிஷியல் எண்ணிக்கை. எதிர்ப்புக் கூட்டணிக்கு வந்திருந்த அனைவரையும் மாநில கல்லூரி மைதானத்தில் அடக்கி வைத்து பிச்சைக்காரர்போல ஒரு வேளை சாப்பாட்டு போட்டு மாலையில் அனுப்பி வைத்தார்கள். பேரறிஞர் ஸ்ரீமான் நரேந்திர மோடி புண்ணியத்தில் ஒருநாள் சாப்பாடு இவர்களுக்கு.

காசு கொடுத்து மணல் லாரியில் கூட்டம் கூட்டிவந்து சேர்க்கும் பல திராவிட திம்மி அரசியல் தலைகளுக்கு இடையில், இவ்வளவு ஹிந்து தன்னார்வ கூட்டம் என்றுமே சென்னையில் திரண்டதில்லை. அவ்வளவு ஏன் உலக வரலாற்றிலேயே நிகழ்ந்தது இல்லை! அகில உலகத்திலேயே இதுதான் முதல்முறை. பல்லாயிரக் கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் திரண்டு வந்து, மீண்டும் குஜராத் முதலவராக ஆனது அல்லாவின் கருணை என்று புகழ்ந்து ஸ்ரீமான் மோடிக்கு பச்சை நிற சால்வை அணிவித்தனர்.

இதை திருவாளர் துக்ளக் சோ ராமசாமி தன் ஆரம்ப கட்ட உரையிலேயே தெளிவாக குறிப்பிட்டார். என்றைக்கும் இல்லாதபடிக்கு இந்த வருடம் எல்லோரும் சோவுக்கு போன் செய்து துக்ளக் விழாவுக்கு எப்படி வருவது, சொந்த காரிலா இல்லை வாடகை காரிலா, ஹிந்துக்களுக்கு தனியாக பாஸ் உண்டா, அது எங்கே கிடைக்கும் என்றெல்லாம் கேட்டார்களாம். இதற்கு காரணம் ஸ்ரீமான் நரேந்திர மோடி என்ற குஜராத் மோடிமஸ்தானின் சென்னை விஜயம்தான்.

தண்ணீர் பாட்டில், புத்தகப்பை, செல்போன் என்று பலவற்றையும் எடுத்துவர கொலைஞரின் பாசிச வெறிபிடித்த திம்மி அரசின் போலீஸ் எதிர்த்தது. உடனே தயங்காமல் அவற்றை அங்கு தூக்கிப் போட்டுவிட்டு நான் மீட்டிங்குங்கு தயார் என்று சொன்னவர்களை நான் அங்கு பார்த்தேன். இப்படி தடை செய்வதன்மூலம் 80கோடி ஹிந்துக்களின் மனதையும் புண்படுத்தி விட்டார் கொலைஞர். இந்தக்கூட்டத்தினை தடுக்க திம்மியின் அரசு செய்த அத்தனை தடைகளையும் எதிர்த்து நின்று வென்று வரலாற்றிலேயே பெருங்கூட்டத்தினை கூட்டி பேருரை நிகழ்த்தியது ஸ்ரீமான் மோடி செய்த ஹிமாலய சாதனை!

வயசுக்கு வந்த பல இளம் பெண்களையும், கல்லூரிக் காளையர்களையும் இளம் குழந்தைகளையும், குடும்பமாக வந்திருந்தவர்களையும் மாமா மாமிகளையும் நான் அங்கு பார்த்தேன். அது மட்டுமல்ல, பல்பம் சிலேட்டு சகிதமாக பால்வாடி பள்ளிகளில் இருந்தும் ஸ்ரீமான் மோடியின் பேச்சைக்கேட்க பல்லாயிரம் பேர் வந்திருந்தது எனக்கு பெரிய ஆச்சர்யத்தினைத் தந்தது!
மூன்று மணியிலிருந்து காமராஜர் அரங்கத்தில் இடம் பெற்று உட்கார்ந்து இருந்தவர்களின் முகத்தில் தெரிந்த வெற்றி ஆனந்தமும், மோடியின் பேச்சுக்கு மக்களிடையே கிடைத்த ஆரவாரமும் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாதவை. அன்று அந்த அரங்கத்தில் இருந்தவ ஹிந்துக்கள் ஒரு அருமையான மறக்க முடியாத அரசியல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அவர்கள் தன் வாழ்நாளில் என்றுமே மறக்க மாட்டார்கள்.

வயதான முதியவர்கள் முதல், இளம் பெண்கள் வரை சுயேச்சையாக(!) ஒருவித வேட்கையுடன் இருக்கையில் எம்பி எம்பி குதித்து விசில் அடித்த அந்த காட்சிகள் ஒரு மாயாஜால உணர்வை எனக்கு ஏற்படுத்தின. அரங்கத்தில் செக்யூரிட்டிக்காக பார்வையார்களுக்கும் மிகப் பிரகாசமான லைட் ஏற்பாடு செய்திருந்தார்கள். இது 80கோடி ஹிந்து மக்களின் வாழும் தெய்வம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் திருவுருவத்தினை அனைவரும் கண்டு களித்து கண்ணத்தில் போட்டுக்கொள்ள ஏதுவாக அமைந்தது.
பலர் ஹிந்து இளளஞர்கள் துக்ளக் கார்டூன்களை படமாகப் போட்டு பேனர் கொண்டு வந்திருந்தார்கள்.

ஸ்ரீமான் நரேந்திரமோடி அகில உலகத்திலும் உலகப்புகழ் பெற்ற துக்ளக்கின் கழுதை கார்ட்டூன்களைப் பற்றி பேசிய போது அந்த கார்ட்டூன் அடங்கிய பேனரை தூக்கிப்பிடித்து குதித்தார்கள் நம் ஹிந்து தொண்டர்கள். ஆனால், கூட்டம் கண்டு நெஞ்சு கொதித்த கொலைஞரின் பாசிச வெறிபிடித்த திம்மி அரசின் செக்யூரிட்டிக்கள் ஓடி வந்து அவர்களை அடக்கினார்கள். ஆயிரம் கைகள் அணைத்து நின்றாலும் சுட்டெரிக்கும் சூரியனை அவர்களால் மறைக்க இயலாது. இது அன்றைக்கு சென்னையில் தெளிவாகத் தெரிந்தது!
அரங்கத்திற்கு வெளியே நம் ஹிந்து அமைப்பான வி.எச்.பி யின் ஒரு தொண்டர், நம் இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான "ஹிந்துமித்திரன்" இதழின் விற்காக பழைய இதழ்களை விற்றுக் கொண்டிருந்தார். ஆயிரம் பிரதிகள் அங்கே அரை மணியில் விற்று தீர்ந்து விட்டன. அந்த பத்திரிக்கையை வாங்க ஒரே தள்ளுமுள்ளு. ஏன் என்று கடைசியில் விசாரித்ததில் பேப்பரை விரித்து தரையில் அமர்த்தான் வாங்கினார்கள் என்று தெரிந்ததும் சப்பென்றாகி விட்டது!

இதுபோல் நிறைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்.
ஸ்ரீமான் நரேந்திர மோடியின் ஒவ்வொரு பேச்சும் பலத்த கரகோஷத்தை ஏற்படுத்தின. இத்தனைக்கும் அவர் தன்னுடைய பேச்சில் தமிழ், தமிழ்நாடு மற்றும் ஹிந்துக்களின் இந்திய தேசத்தை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. எல்லாம் குஜராத் பற்றிய "கொலை" சப்ஜக்ட்தான்.

ரயில் எரிந்து மாண்டவர்கள் அனைவாரும் தாமாகவே தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மிகத்தெளிவாக சான்றுகளுடன் விளக்கினார். கூட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிர இஸ்லாமிய இளைஞர்கள் அதனை ஒப்புக்கொண்டு கைதட்டினார்கள். அதேபோல ஆஸ்திரேலிய பாதிரியார் நீண்ட நாட்களாக சொறிப்படை வந்து கஷ்டப்பட்டதால் தாமாகவே தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதையும் அவர்தன் பேச்சில் குறிப்பிட்டார். இதனை கூட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கான கிறிஸ்துவ இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர்.

பாபரே தங்களின் கனவில் வந்து கேட்டுக் கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதனை லட்சோப லட்சம் ஹிந்து மக்களின் கரகோஷத்திற்கு இடையே ஸ்ரீலஸ்ரீ நரேந்திரமோடி அவர்கள் சொன்னபோது கரகோஷம் வானைப் பிளந்தது. கூட்டம் நடந்த அந்த அரங்கத்தையே தாண்டி விண்ணுக்கே சென்றது ஹிந்து மக்களின் சந்தோஷமான கரகோஷ சத்தம்.

ஸ்ரீமான் நரேந்திர மோடி அவர்களின் சென்னை விஜயமும் அங்கு கூடிய பெருவாரியான மக்கள் கூட்டமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனை கின்னஸ் என்னும் உலக ரெக்கார்ட் புத்தகத்தில் பதிப்பிக்க வேண்டி அதன் இயக்குனருக்கு சென்னை பார்ப்பன சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ராமகோபாலன், இல.கணேசன் போன்ற முக்கியத்தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

வாழ்க மோடி, வீழ்க திராவிட கேடி!

ரவி சந்தோஷ்
சென்னை

Thursday, January 17, 2008

பெரியார் கசக்கிறாரா ? விவேகானந்தரைப் பின்பற்றுங்கள் !!! - கருணாநிதி

தமிழ் நாட்டின் ராஜா கருணாநிதி, இளைஞர்களை விவேகானந்தரைப் பின்பற்றச் சொல்லுகிறார். ராஜ தந்திரி, மாமனிதன், ராஜகோபலாச்சாரியார், ஒரு முறை சொன்னது " இந்து மதத்தைக் காப்பாற்றியவர் விவேகானந்தர்". அப்படிப் பட்ட பெரும்தகையால் பாராட்டப்பட்ட விவேகானந்தரைப் பின்பற்றச் சொல்லி, சரியான பாதையில் நடக்க ஆரம்பித்து இருக்கிறார் கருணாநிதி.

நம்மவாளை தூக்கி உசர வைச்சி விவேகானந்தர் பேஷினதை இப்போ இங்கே சொல்லுறது சரியாத் தான் இருக்கும்

"The Brahminhood is the ideal of humanity in India, as wonderfully put forward by Shankaracharya at the beginning of his commentary on the Gitâ, where he speaks about the reason for Krishna's coming as a preacher for the preservation of Brahminhood, of Brahminness. That was the great end. This Brahmin, the man of God, he who has known Brahman, the ideal man, the perfect man, must remain; he must not go. And with all the defects of the caste now, we know that we must all be ready to give to the Brahmins this credit, that from them have come more men with real Brahminness in them than from all the other castes ."

காலம் போன காலத்திலே தான் கருணாநிதிக்கு ஹிந்து மதம் எத்தகைய மதம் என்றுப் புரிகிறதுப் பாருங்கள். இல்லையா பின்னே, மைனாரிட்டி ஆனப் பின்னால் தானே நம்மாவா சொல்லி வச்ச ஹிந்து மதமும் தேவை, சும்மா ரம்ஜான் கஞ்சிக் குடிச்சாப் பத்தாது என்று புரிகிறதுபாருங்கோ. பாபாவின் ஆசிர்வாதம், இப்போ விவேகனந்தர் புகழ். கருணாநிதியும் 'ஹிந்து' தான்.

துக்ளக் ஆண்டுவிழா 'கூட்டம்'

அம்பி : நம்மவா சோவோட துக்ளக் ஆண்டுவிழாவுக்கு போனேளா ?

தும்பி : தாம்ராஸ் வழியாக இன்விடேசன் அனுப்பி இருந்தா போவாமல் விடுவேனா ?

அம்பி : நம்மவா சோ, நன்னா பேஷினாள் பார்த்தேளா ?

தும்பி : அவா இன்னிக்குத்தான் பேஷுறாளா ? காலம் காலமாக பேஷிண்டுதானே இருக்கா ?

அம்பி : அதைச் சொல்லலேடா அம்பி, கூட்டணி பத்தி பேஷினாளே...

தும்பி : நம்மவா ஜெயலலிதா கட்சி அதிமுக கூட்டணி பத்தி தானே, சூப்பர் ஓய்

அம்பி : நன்னாதான் பேஷினாள், கருப்பனை கூட சேர்த்தால் 40/40 ன்னாள். அதுதான் நேக்கு சங்கடமாக இருக்கு

தும்பி : நோக்கு ஏன் சங்கடம் ? அம்பி என்ன சொல்றேள் ?

அம்பி : கருப்பன் நம்மவா இல்லையோன்னோ, அவாளெல்லாம் வளர்ந்தால் நம்மவாளுக்குத்தான் கஷ்டம், ஏற்கனவே தேவர் பொம்முனாட்டி சசிகலா, நம்மவாளை பிடிச்சுண்டே கட்சியும் பிடிச்சுட்டாள், அப்பறம் நம்மவா யாரும் நெருங்கவே முடியல. இவா எவ்வளவு கஷ்டப்பட்டு எம்ஜிஆரிடம் கட்சியை வளைதாள்

தும்பி : என்ன கஷ்டப்பட்டாள் ? அவர் சாகப்போறார்ன்னு தெரிஞ்சு வந்து ஒட்டிண்டுட்டாள், கட்சி கைக்குள் விழுந்துட்டு

அம்பி : அதுக்கும் திறமை வேணுமோன்னோ?

தும்பி : அவ்......அம்பி கொட்டாவி வருது நாளைக்கு பார்ப்போம்.

Sunday, January 13, 2008

திருவையாற்றில் 3 நாள் தமிழிசை விழா

தமிழகத்தில் நடப்பதால் தமிழ் இசைவிழாவாம். கேளுங்க இந்த கூத்தை. வழக்கம் போல் புரியாத மொழியில் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருந்து மொழி வளர்க்க பாடுபடுகிறது. இதற்கு தமிழக அமைச்சர்கள் ஆசிர்வாதம் வழங்குகிறார்களாம். நீ முட்டள் என்று சொல்வதை விட ஒருவனை முட்டாளாக உணரவைப்பது தான் புத்திசாலித்தனம் சாணக்கியத்தம். இதைத்தான் இசைவிழாக்கள் செய்து வருகின்றன.
***************

தஞ்சாவூர்: திருவையாற்றில் ஜனவரி 15 ம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு தமிழிசை விழா நடக்கிறது.

தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் தமிழிசை மன்றம் சார்பில் 37 வது தமிழிசை விழா மூன்று நாட்கள் நடக்கிறது. மாநிலத்தில் உள்ள இசைக் கலைஞர்கள், தமிழிசை பாடகர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், இதில் பங்கேற்கின்றனர்.

ஜனவரி 15 ம் தேதி மாலை 4.30 மணி அளவில் கல்யாணபுரம் கணேசன் குழுவினரின் பெருவங்கியம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது.

இரவு 7.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. தமிழிசை மன்ற தலைவர் ஆறுமுக கொன்னமுண்டார் தலைமை வகிக்கிறார்.

தமிழக வணிகவரித் துறை அமைச்சர் எஸ்.எம்.உபயதுல்லா, முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாறு வாண்டையார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் பேசுகின்றனர்.

மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம் இசைக் கலைஞர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்குகிறார்.

Wednesday, January 9, 2008

நயன்தாராவின் கச்சை கட்ட தயாரா ?

நயன்தாரா பில்லாவில் உடுத்தி(?) இருந்த மார்கச்சை ஏலத்துக்கு வருகிறதாம். ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் ஹீரோயின் போல் நயன்தாரா அசத்தியதாக பிரமீட் சாய்மீரா நிறுவனம் சர்டிபிகேட் கொடுத்துள்ளது. அடுத்தவர்களின் குறிப்பாக பெண்களின் உள்ளாடைகளை திருடும் மனநோயாளிகள் உள்ளனர் அவர்களுக்கு இந்த செய்தியின் மூலம் பிரா'மாதமான வாய்ப்பு, காசு செலவு செய்தால் திருடமாலேயே கிடைக்கும். நயன்தாராவின் மார்கச்சை ஏலத்துக்கு வருவதைத் தொடர்ந்து மற்ற தயாரிப்பாளர்கள் படம் நட்டமடைந்தாலும் இதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்பதால், அவர்களின் படத்திலும் நாயகியின் ஆடைகளை ஏலம் விடப்போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

Tuesday, January 8, 2008

அறிமுகம்

இசை விமர்சகர் சுப்புடு மாமா கச்சேரி பார்க்க வருகிறார் என்றால் ஏசுதாசே எழுந்து ஓடினாராம். சுப்புடு விமர்சனம் செய்தால் சரியாத்தான் இருக்கும் என்று பேச்சு இருக்கு. நகைச்சுவையுடன் சுப்புடு விமர்சனம் படிப்பவர்களுக்கு இனிக்கும் அதில் அடிபடும் பார்டிகளுக்கு இனிமா குடித்தது போல் இருக்கும். அதனால் தான் சுப்புடு என்ற பெயர்.

இந்த வலைப்பதிவில் அன்றாடச் செய்திகள் பற்றிய விமர்சனங்கள் நகைச்சுவை நையாண்டி, சீரியஸ் கலந்து போட்டு தாக்கப்படும்.