Sunday, January 20, 2008

மோடி இஸ்லாமியர்களின் நண்பன் - மறைக்கப்பட்ட உண்மைகள்.

ரவி சந்தோஷ் என்ற நண்பர், துக்ளக் ஆண்டுவிழாவுக்கு சென்று வந்தாராம், அவர் சொந்தமாக பதிவு வைத்திருக்கவில்லை. என்னுடன் சாட்டில் தொடர்பு கொண்டு துக்ளக் ஆண்டுவிழா செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
_________________________________

ஸ்ரீமான் நரேந்திர மோடியின் ஹிந்து ஆதரவு பேச்சினைக் கேட்க திங்கட்கிழமை ஐந்தாயிரம் பேர் சென்னையில் திரண்டு இருந்தார்கள். எல்லோரும் குறைந்த அளவு அவருக்காக 40மணி நேரம் காத்திருந்து அவரின் பேச்சைக் கேட்டார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. இதைத்தவிர இன்னும் பல்லாயிரக் கணக்கான ஹிந்து மக்கள் கொலைஞரின் திராவிட பாசிச செக்யூரிடி மற்றும் உடன்பிறப்பு கூட்ட கெடுபிடிகளுக்கு பயந்து ஆசையிருந்தும் வருவதை தவிர்த்தார்கள்..
இதனை எதிர்த்து, தெருவுக்குதெரு உண்டியல் குலுக்கும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் கமிஷனர் ஆபீஸ் அருகில் நடந்தது. அதற்கு வெறும் 40 பேர்தான் வந்திருந்தனர். முஸ்லிம் ஐக்கிய அணியினர் ஆயிரம் விளக்கு மசூதி அருகில் திரண்டனர் மொத்த எண்ணிக்கையே வெறும் 160 பேர்.

தமிழக இஸ்லாமிய தவ்ஹீத் ஜமாத் கூட்டிய ஒப்பாரிக்கு திரண்டவர்கள் மொத்தம் 25 பேர்.
இவையெல்லாம் கொலைஞரின் திராவிட பாசிச ஆட்சியின் போலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட அபிஷியல் எண்ணிக்கை. எதிர்ப்புக் கூட்டணிக்கு வந்திருந்த அனைவரையும் மாநில கல்லூரி மைதானத்தில் அடக்கி வைத்து பிச்சைக்காரர்போல ஒரு வேளை சாப்பாட்டு போட்டு மாலையில் அனுப்பி வைத்தார்கள். பேரறிஞர் ஸ்ரீமான் நரேந்திர மோடி புண்ணியத்தில் ஒருநாள் சாப்பாடு இவர்களுக்கு.

காசு கொடுத்து மணல் லாரியில் கூட்டம் கூட்டிவந்து சேர்க்கும் பல திராவிட திம்மி அரசியல் தலைகளுக்கு இடையில், இவ்வளவு ஹிந்து தன்னார்வ கூட்டம் என்றுமே சென்னையில் திரண்டதில்லை. அவ்வளவு ஏன் உலக வரலாற்றிலேயே நிகழ்ந்தது இல்லை! அகில உலகத்திலேயே இதுதான் முதல்முறை. பல்லாயிரக் கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் திரண்டு வந்து, மீண்டும் குஜராத் முதலவராக ஆனது அல்லாவின் கருணை என்று புகழ்ந்து ஸ்ரீமான் மோடிக்கு பச்சை நிற சால்வை அணிவித்தனர்.

இதை திருவாளர் துக்ளக் சோ ராமசாமி தன் ஆரம்ப கட்ட உரையிலேயே தெளிவாக குறிப்பிட்டார். என்றைக்கும் இல்லாதபடிக்கு இந்த வருடம் எல்லோரும் சோவுக்கு போன் செய்து துக்ளக் விழாவுக்கு எப்படி வருவது, சொந்த காரிலா இல்லை வாடகை காரிலா, ஹிந்துக்களுக்கு தனியாக பாஸ் உண்டா, அது எங்கே கிடைக்கும் என்றெல்லாம் கேட்டார்களாம். இதற்கு காரணம் ஸ்ரீமான் நரேந்திர மோடி என்ற குஜராத் மோடிமஸ்தானின் சென்னை விஜயம்தான்.

தண்ணீர் பாட்டில், புத்தகப்பை, செல்போன் என்று பலவற்றையும் எடுத்துவர கொலைஞரின் பாசிச வெறிபிடித்த திம்மி அரசின் போலீஸ் எதிர்த்தது. உடனே தயங்காமல் அவற்றை அங்கு தூக்கிப் போட்டுவிட்டு நான் மீட்டிங்குங்கு தயார் என்று சொன்னவர்களை நான் அங்கு பார்த்தேன். இப்படி தடை செய்வதன்மூலம் 80கோடி ஹிந்துக்களின் மனதையும் புண்படுத்தி விட்டார் கொலைஞர். இந்தக்கூட்டத்தினை தடுக்க திம்மியின் அரசு செய்த அத்தனை தடைகளையும் எதிர்த்து நின்று வென்று வரலாற்றிலேயே பெருங்கூட்டத்தினை கூட்டி பேருரை நிகழ்த்தியது ஸ்ரீமான் மோடி செய்த ஹிமாலய சாதனை!

வயசுக்கு வந்த பல இளம் பெண்களையும், கல்லூரிக் காளையர்களையும் இளம் குழந்தைகளையும், குடும்பமாக வந்திருந்தவர்களையும் மாமா மாமிகளையும் நான் அங்கு பார்த்தேன். அது மட்டுமல்ல, பல்பம் சிலேட்டு சகிதமாக பால்வாடி பள்ளிகளில் இருந்தும் ஸ்ரீமான் மோடியின் பேச்சைக்கேட்க பல்லாயிரம் பேர் வந்திருந்தது எனக்கு பெரிய ஆச்சர்யத்தினைத் தந்தது!
மூன்று மணியிலிருந்து காமராஜர் அரங்கத்தில் இடம் பெற்று உட்கார்ந்து இருந்தவர்களின் முகத்தில் தெரிந்த வெற்றி ஆனந்தமும், மோடியின் பேச்சுக்கு மக்களிடையே கிடைத்த ஆரவாரமும் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாதவை. அன்று அந்த அரங்கத்தில் இருந்தவ ஹிந்துக்கள் ஒரு அருமையான மறக்க முடியாத அரசியல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அவர்கள் தன் வாழ்நாளில் என்றுமே மறக்க மாட்டார்கள்.

வயதான முதியவர்கள் முதல், இளம் பெண்கள் வரை சுயேச்சையாக(!) ஒருவித வேட்கையுடன் இருக்கையில் எம்பி எம்பி குதித்து விசில் அடித்த அந்த காட்சிகள் ஒரு மாயாஜால உணர்வை எனக்கு ஏற்படுத்தின. அரங்கத்தில் செக்யூரிட்டிக்காக பார்வையார்களுக்கும் மிகப் பிரகாசமான லைட் ஏற்பாடு செய்திருந்தார்கள். இது 80கோடி ஹிந்து மக்களின் வாழும் தெய்வம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் திருவுருவத்தினை அனைவரும் கண்டு களித்து கண்ணத்தில் போட்டுக்கொள்ள ஏதுவாக அமைந்தது.
பலர் ஹிந்து இளளஞர்கள் துக்ளக் கார்டூன்களை படமாகப் போட்டு பேனர் கொண்டு வந்திருந்தார்கள்.

ஸ்ரீமான் நரேந்திரமோடி அகில உலகத்திலும் உலகப்புகழ் பெற்ற துக்ளக்கின் கழுதை கார்ட்டூன்களைப் பற்றி பேசிய போது அந்த கார்ட்டூன் அடங்கிய பேனரை தூக்கிப்பிடித்து குதித்தார்கள் நம் ஹிந்து தொண்டர்கள். ஆனால், கூட்டம் கண்டு நெஞ்சு கொதித்த கொலைஞரின் பாசிச வெறிபிடித்த திம்மி அரசின் செக்யூரிட்டிக்கள் ஓடி வந்து அவர்களை அடக்கினார்கள். ஆயிரம் கைகள் அணைத்து நின்றாலும் சுட்டெரிக்கும் சூரியனை அவர்களால் மறைக்க இயலாது. இது அன்றைக்கு சென்னையில் தெளிவாகத் தெரிந்தது!
அரங்கத்திற்கு வெளியே நம் ஹிந்து அமைப்பான வி.எச்.பி யின் ஒரு தொண்டர், நம் இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான "ஹிந்துமித்திரன்" இதழின் விற்காக பழைய இதழ்களை விற்றுக் கொண்டிருந்தார். ஆயிரம் பிரதிகள் அங்கே அரை மணியில் விற்று தீர்ந்து விட்டன. அந்த பத்திரிக்கையை வாங்க ஒரே தள்ளுமுள்ளு. ஏன் என்று கடைசியில் விசாரித்ததில் பேப்பரை விரித்து தரையில் அமர்த்தான் வாங்கினார்கள் என்று தெரிந்ததும் சப்பென்றாகி விட்டது!

இதுபோல் நிறைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்.
ஸ்ரீமான் நரேந்திர மோடியின் ஒவ்வொரு பேச்சும் பலத்த கரகோஷத்தை ஏற்படுத்தின. இத்தனைக்கும் அவர் தன்னுடைய பேச்சில் தமிழ், தமிழ்நாடு மற்றும் ஹிந்துக்களின் இந்திய தேசத்தை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. எல்லாம் குஜராத் பற்றிய "கொலை" சப்ஜக்ட்தான்.

ரயில் எரிந்து மாண்டவர்கள் அனைவாரும் தாமாகவே தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மிகத்தெளிவாக சான்றுகளுடன் விளக்கினார். கூட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிர இஸ்லாமிய இளைஞர்கள் அதனை ஒப்புக்கொண்டு கைதட்டினார்கள். அதேபோல ஆஸ்திரேலிய பாதிரியார் நீண்ட நாட்களாக சொறிப்படை வந்து கஷ்டப்பட்டதால் தாமாகவே தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதையும் அவர்தன் பேச்சில் குறிப்பிட்டார். இதனை கூட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கான கிறிஸ்துவ இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர்.

பாபரே தங்களின் கனவில் வந்து கேட்டுக் கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதனை லட்சோப லட்சம் ஹிந்து மக்களின் கரகோஷத்திற்கு இடையே ஸ்ரீலஸ்ரீ நரேந்திரமோடி அவர்கள் சொன்னபோது கரகோஷம் வானைப் பிளந்தது. கூட்டம் நடந்த அந்த அரங்கத்தையே தாண்டி விண்ணுக்கே சென்றது ஹிந்து மக்களின் சந்தோஷமான கரகோஷ சத்தம்.

ஸ்ரீமான் நரேந்திர மோடி அவர்களின் சென்னை விஜயமும் அங்கு கூடிய பெருவாரியான மக்கள் கூட்டமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனை கின்னஸ் என்னும் உலக ரெக்கார்ட் புத்தகத்தில் பதிப்பிக்க வேண்டி அதன் இயக்குனருக்கு சென்னை பார்ப்பன சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ராமகோபாலன், இல.கணேசன் போன்ற முக்கியத்தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

வாழ்க மோடி, வீழ்க திராவிட கேடி!

ரவி சந்தோஷ்
சென்னை

3 comments:

Anonymous said...

//
அரங்கத்திற்கு வெளியே நம் ஹிந்து அமைப்பான வி.எச்.பி யின் ஒரு தொண்டர், நம் இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான "ஹிந்துமித்திரன்" இதழின் விற்காக பழைய இதழ்களை விற்றுக் கொண்டிருந்தார். ஆயிரம் பிரதிகள் அங்கே அரை மணியில் விற்று தீர்ந்து விட்டன. அந்த பத்திரிக்கையை வாங்க ஒரே தள்ளுமுள்ளு. ஏன் என்று கடைசியில் விசாரித்ததில் பேப்பரை விரித்து தரையில் அமர்த்தான் வாங்கினார்கள் என்று தெரிந்ததும் சப்பென்றாகி விட்டது! //

:-)

Anonymous said...

சுப்புடு தாத்தா உங்களுக்கு இலைக்காரனைத் தெரியுமா? உண்மையைச் சொல்லவும்.

Anonymous said...

அப்போ கலவரத்துல செத்தவாலாம் என் கனவுல வந்து modi ய samharam பண்ண சொன்னா. அப்போ modi யா போட்டு தள்ளிருவோமா? ...மசூதிய இடிச்துக்கு இப்படி ஒரு நொண்டி சாக்கா? .. ரொம்ப தமாஷா இல்லையா நோக்கு.. என்ன ஓய் ??