Sunday, February 24, 2008

2007ன் சிறந்த வலைப்பதிவாளர்.

2007ல் மொக்கை மன்னர்கள் கோலோச்சினார்கள், சுப்புடுவாகிய நான் 2006ல் இருந்தே பதிவுகளை படித்துவருகிறேன். இருங்க, 2006ல் ஸ்டார் பதிவர் யார் என்று தெரியுமா ? தெரிஞ்சா பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை. 2007ல் ஏன் ஸ்டார் பதிவர் செலக்சன் நடக்கவில்லை. காரணம் இருக்கு. ஒரு பதிவர் ஸ்டார் பதிவர் ஆக அடிப்படை தகுதி என்று ஒன்று உண்டு, அதன் படி அவர் போலிக்கு தெரிந்தவனாக இருக்கனும்ம், தெரிஞ்சவனாக இருந்தால் மட்டும் போதாது, போலிக்கு சக பதிவர்களின் மனைவி மகளைப் பற்றி ஆபாசமாக எழுதித் தரனும், அதையும் அலுவலக முகவரியில் இருந்தே தந்திருந்து அந்த சான்றிதழை போலி அவன் பதிவில் வெளி இடனும், அதன் பிறகுதான் ஸ்டார் பதிவர் அறிப்பை செய்ய முடியும், இதெல்லாம் இல்லாமலே ஒருவர் ஸ்டார் பதிவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டாரே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் போலிக்கு அல்லக்கையாக செயல்பட்டார் என்ற முதல் தகுதியே சிறப்பு தகுதியாக கருதி ஸ்டார் அவார்டு வாங்கிட்டார். 2007க்கு யாருக்கு கொடுப்பது ?

2007ல் போலி எங்க போனான் என்றே தெரியல, அப்பறம் எப்படி அவனுக்கு அல்லக்கையாக செயல்பட முடியும்? எனவே 2007ன் சிறந்த ஸ்டார் பதிவர் யாரும் இல்லை.

போலி அண்ணா, திரும்ப வாங்க 2008ல் யாருக்காவது ஒருவருக்கு ஸ்டார் பதிவர் அவார்டு கொடுகணும்

Monday, February 4, 2008

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு....

இந்திய தேசிய அரசு ஒரு உத்தரவுப் போட்டா, அதை மதிச்சு நடக்கிறது தானே மாநில அரசாங்கத்தின் வேலை. நடுவன் அரசு, எஸ்.சி/எஸ்.டி சமூகத்தினருக்கு உதவித் தொகை வழங்குவதில் ஒரு சிறிய மாற்றம் செய்திருக்கிறது. அதை அப்படி மதித்து நடக்காமல், தான் தோன்றித்தனமாக, இந்த திராவிட திம்மிகள் தவ்வுகிறது.

அப்படி என்ன பெரிசா மாறுதல் செஞ்சிட்டா. அட்டவனை சாதி மக்களுக்கு, கல்லூரியில் நுழைந்துப் படித்தாலே, உதவித் தொகை என்று இருந்ததை, 60% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, உதவித் தொகை என்று மாற்றியமைச்சியிருக்கா. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு. 60% என்று சொன்னால் தானே படிப்பார்கள். இல்லாவிடில் படிக்காமல் பணம் மட்டும் பெற்று சும்மாயிருப்பர்கள் அல்லவா.

அதுவுமில்லாமல், சிறப்பு தகுதிகள் இல்லையே. உன்மையான மைனாரிட்டியாக ( அதாவது 3% மொத்த ஜனத்தொகையில் ) இருந்தால் தானே அது கொடுக்கப்படனும்.
அதில் ஒரு உள்ளார்ந்த உன்னதமான நோக்கம் இருக்கு என்பது தமிழகத்தின் நிரந்திர தலைவலி, ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் தெரியும். காங்கிரஸ்காரா எல்லாம், அவ அவா சண்டையில் மும்மரமா இருக்கா. அதுனாலே, அவ வழக்கம் போல ஒதுங்கிடுவா.
இந்த மாற்றம் அறிவித்தவுடன், உடனடியாக கருணாநிதி, இதை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். தமிழகத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்று அறிவிக்கிறார். படிக்க வந்துள்ள தாழ்த்தப்பட்டுள்ள சமுதாய மாணவர்களின் கண்களைக் குத்தும் மோசமான முயற்சி என்று வீரமணி சொல்லுறார். வை கோ, மத்திய அரசு, இந்த உத்தரவை மீட்டுக்கொள்ள வேண்டுகோள் வைக்கிறார். கம்பூனிஸ்ட் கட்சிகள், இது அந்த மக்களுக்கு இழைக்கப்ப்டும் துரோகம் என்று அலறுகிறது.

ஆனால், நம்மாத்து பொம்மனாட்டி, ஜெயலலிதா, அதை எல்லாம், சட்டை செய்யவே இல்லை. அவருக்குத் தெரியும். எது மக்கள் பிரச்சனை. அன்பழகன் உதவிப் பேராசிரியரா, இல்லை பேராசிரியாரா என்பதற்கு விடை கண்டுப்பிடிப்பது தானே முதல் வேலை. அதை விடுத்து, இது மாதிரி விசயங்களில் தலையிடலாமா. இது வரை, ஜெயலலிதா தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதாக யாராவது நிருபிக்க முடியும்மா. முடியாது. அந்த தப்பை அவர்கள் செய்யவே மாட்டார்கள்.

இந்திய இறையான்மைக்கு சவால் விடும், கருனாநிதி நடுவன் அரசின் ஆனையயை மதிக்கத் தவறியதற்காக, ஆட்சியயை கலைக்க முடியும்மா என்று யோசித்து வருகிறார். அதனால், அந்த உன்னதமான காரணத்தை, மக்களுக்கு அறிவிக்க முடியாது சூழ்நிலையில் இருக்கிறார். அது நீசர்களுக்குச் சொன்னாலும் புரியாது.

ஜெயலலிதா நினனப்பதைச் செய்யும், உலக அறிவாளி சோ, மாரி போல் கருத்துக்களைப் பொழிபவர். அவர் கூடிய விரைவில் தனது கேள்வி பதிலில் இதற்கான சப்பைக் கட்டு, கட்டுவார் என்று எதிர்பாருங்கள்.

Sunday, February 3, 2008

கிச்சு மாமாவுக்கு ஆரிய 'நச்' கேள்விகள்.

கிச்சுமாமா உள்ளங்கையை தேய்து சொல்கிறார், "தேவபாசையும், தமிழும் ஆதிகாலத்து பாஷைகளாம், இரண்டிற்கும் பொதுவான அம்சம் என்பது போல் தேவ ரிஷிகளின் பெயர்கள் இரண்டு பாஷைகளின் பொத்தகங்களிலும் உள்ளதாம், வெள்ளைக்காரன் ஆரியர் திராவிடர் என்று பிரித்து போட்டுவிட்டு பிராமனாளுக்கும், மத்தவாளுக்கும் பேதம் பிரிச்சு வச்சிட்டான்"

மாமாவுக்கு சில கேள்விகள்.

வெள்ளைக்காரன் எத்தனை 'ஆரிய' பவன்களை திறந்து வைத்து பெயர் வைத்தான்?
வெள்ளைக்காரன் எங்கே எப்போது 'ஆரிய' சமாஜ் என்ற பார்பன அமைப்பை தோற்றுவித்தான்?
வெள்ளைக்காரன் சூத்திரவாள் யார் ? ப்ராம்ணவாள் யார் என்று எப்போது பிரித்தான்?
வெள்ளைக்காரன் மனுவை அச்சிட்டு வீடுவிடாக கொடுத்தானா?
வெள்ளைக்காரன் ப்ராம்ணவாள் ப்ரம்மாவின் மூக்கில் இருந்து பிறந்தவராகவும், சூத்திரன் காலில் இருந்து பிறந்தவராகவும் எப்போது பிரச்சாரம் செய்தான்?

Tuesday, January 29, 2008

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா?

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா? அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், முதலில் தேசாபிமானம் என்றால் என்ன தெரியுமா ?

1. இந்தியா, இந்து இந்துராஷ்டரம் பற்றி தெரிந்த இந்தியராகவும் இந்துவாகவும் இருக்க வேண்டும்.

2. இந்தி வாழ்க, இந்தியை எதிர்த்ததால் தமிழ்நாடு தனித்து நின்றுவிட்டது என்ற தேசிய அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

3. மோடி அல்லது அத்வானி போன்ற இந்துக் கடவுள்களின் கலர்படம் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் அல்லது அலுவலக மேசையில் வைத்திருக்க வேண்டும்

4. சமஸ்கிரதம் இந்தியாவின் பொது மொழி என்றும் அது மட்டுமே கோவில் அர்சனைக்கு உபயோகிக்க வேண்டும் என்பதை ஊடகங்கள் வழியாக அது பற்றி தெரியாதவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

5. இலங்கை தமிழர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை தனித்தனியாக பிரித்து புரிந்து கொண்டு தெரியாதவர்களுக்கு சொல்ல வேண்டும், அதற்கு அடிக்கடி நீங்கள் துக்ளக்கும் தினமலரும் படிக்க வேண்டும். குறிப்பாக விடுதலை புலிகள் பற்றி எவரும் ஆதரவாக பேசினால் தேச துரோகி என அவரைப்பற்றி எச்சரிக்கை செய்து இந்திய அரசை விழித்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

6. ஈவெராமசாமி பற்றி தெரிந்திருக்க வேண்டியதில்லை, அவருடைய சாதி நாயக்கர் என்று தெரிந்தாலே போதும்.

7. கருணாநிதியும் கருணாநிதி குடும்பமும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக அடிக்கடி பலருக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

8. நாற்பது ஆண்டுகால திராவிடர் ஆட்சியில் தமிழகம் பின் தங்கிவிட்டது என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

9. துலுக்கர்களை சிறுபான்மையினர் என்று புரிந்து கொண்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு என்று அரசாங்கம் பேச்சு எடுத்தாலே அபாய சங்கு வாசித்து, பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறைவதாக அக்கறைபட்டுக் கொள்ளவேண்டும்.

10. இட ஒதுக்கீடு இந்தியரின் திறமையை குறைத்துவிட்டது, தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் அனைவரும் அனைத்தையும் பெற வேண்டும் என்று சொல்லத் தெரியவேண்டும். அதாவது, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற சமத்துவம் பேஷ தெரிந்திருக்க வேண்டும்

12. கடவுள் சேவை செய்யும் வகுப்பினர் குறிப்பாக பார்பனர் கடவுளுக்கும் மேல் என்று தெரிந்து கொண்டு அவர்கள் செயலில் குறிக்கிடாமல் இருக்க வேண்டும்.

13. கோவில் என்பது தனிமனிதரின் சொத்து அல்ல, அதற்கு என்றே ஆகம வரை முறை இருக்கிறது, அதை மதித்தாலே போதும், மாற்றம் வேண்டும் என்று எவராவது கேட்டால், அதெல்லாம் மாறப்படாது, இப்போது இருக்கும் நடைமுறையே சரி ஆண்டவனும் இதைதான் விரும்புகிறார். மாற்றினால் ஆண்டவனுக்கு ஆகாது, அடுக்காது, சுனாமி வரும், பூகம்பம் வெடிக்கும் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

14. தமிழில் அர்சனை என்று எதாவது மூதேவிகள் வந்து நின்றால் ஆண்டவனுக்கு எல்லா மொழிகளும் புரியும், தமிழென்ன? சமஸ்கிரதமென்ன? ஆனால் சமஸ்கிரத்தில் செய்வது தான் ஆண்டவனுக்கும் ஆச்சாராத்துக்கும் நல்லது, ஆண்டவனுக்கு பல மொழி தெரிந்தாலும், ஆண்டவனுக்கு அவன் பாஷையில் பேசினால் அவனுக்கு உகந்ததாக் இருக்கும் என்று எவரும் கேட்டால் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

15. இந்து மதத்துக்கு விரோதமாக எவரும் பேஷினால் அவர்களை இந்திய துரோகி, இன துரோகி என்று அடையாளம் காட்ட வேண்டும்.

16. மோடி போன்ற பெரிய மனிதர்கள் வருகை தரும் போது அது பற்றிய முழுகவரேஜ் செய்து அவர்களின் புகழை பரப்ப வேண்டும்.

17. வந்தேறிகள் என்று எவரும் பேஷினால், அப்படி யாரும் இல்லை, அது கிறித்துவ மிஷனரிகளின் சதி என்று சொல்லிவிட்டு திராவிடர்கள் தான் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தேறினார்கள் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

18. கோத்ரா ரயில் எரிப்பு பற்றி எவரும் கேட்டால், டீசல் டாங் வெடித்து ரயில் எரிந்ததாகவும் மோடியின் அரசு எவ்வளவோ போராடியும் முஸ்லிம்களை அல்லா அழைத்துக் கொண்டதை தடுக்க முடியவில்லை என்ற உண்மையை உறக்கச் சொல்லவும், இறைவன் மோடி மீது பழிச்சொல்லாக சொல்லப்படுவது, காங்கிரஸ் ஏஜெண்ட் தெகல்காவின் திட்டமிட்ட சதி என்று சொல்லத் தெரிய வேண்டும்.

19. ஆண்டி சோனியாவை ஆணடினோமெய்னோ, இத்தாலிகாரி, கிறித்துவர்களின் கைக்கூலி என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

20. லோக குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரிய பெரியவாளின் புகழை அகில லோகத்துக்கும் பரப்பவேண்டும்.

22. தேசம், தேசியம் தேசநலன் என்ற வார்த்தையை அவ்வப்போது உபயோக படுத்த வேண்டும்.

21. இதில் ஒன்றிரண்டை செய்தும், மேற்கண்ட எல்லாவற்றையும் போற்றி அடிவருடும் அடியார்களை கண்டு கொண்டு அவர்களை தட்டிக் கொடுத்து பேஷ வேண்டும்.

இன்னும் 100 எழுதாலம். யாருக்கு தேசவிசுவாசம் இருக்கிறது? இதையெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள், எல்லோரும் நாத்திக நாயகரின் துர்போதனையிலும், திராவிட கம்யூனிசத்தின் கெட்ட சவகாசத்திலும் இருக்கிறார்களே என்று நொந்து கொள்ள வேண்டி இருக்கிறது, அலுப்பாக இருக்கிறது. கடைசியாக,

மேற்கண்ட இருபத்து சொச்சம் பாயிண்டையும் ஒருவர் செய்து தான் தேசாபிமானியாக இருக்க வேண்டுமா? இல்லை. இல்லை. ஒரு சுலப பாதை இருக்கிறது. எட்டாம் ஆம் நம்பர் நூலை வாங்கி மூன்று புறிகளாக்கி தோளைச் சுற்றி மார்பு வழியாக இடுப்பின் குறுக்கில் சுற்றிக் கொண்டால் போதும், மேலே சொன்னவை எல்லாம் தன்னாலேயே நடக்கும், அதன் பிறகு நீங்கள் தேசாபிமானிதான்.

உடனே அது இல்லாதவர்கள் எல்லோரும் அணிந்து தேசாபிமானி ஆகப்போகிறேன் என்கிறீர்களா? முப்புறி நூல் எல்லோரும் அணிய முடியுமா? அதற்கே உள்ள மகிமை தான் என்ன? துர்அதிர்ஷட வசமாக நினைத்த மாத்திரத்தில் எல்லோரும் அணிய முடியாது. குலம் கோத்திரம் இவை எல்லாம் இருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் தேசாபிமனியாக முடியாது. பூனூல் அணிபவர் எவரோ அவர்களே தேசாபிமானிகள், மற்றவர்கள் தேசதுரோகிகள்.

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா?

Friday, January 25, 2008

பார்பனர்கள் மட்டும் தான் தமிழ் எதிரியா?

தை மாதம் முதல் திகதியை புத்தாண்டாக அறிவித்ததை தமிழர்கள் அனைவரும் வரவேற்கின்றனர். வழக்கம் போல் பார்பனர்கள் எள்ளி நகையாடுகின்றனர். தமிழன் என்றால் கிள்ளுக் கீரையாக நினைத்ததற்கு இணையத்தில் செருப்படி கிடைத்ததும் பார்பன கூட்டம் ஓடிப் சென்று பார்பன பாரதி பெயரில் ஒரு ஓசி திரட்டியை வைத்துக் கொண்டுள்ளது. அதில் ஒரிஜினல் பெயரிலும் தமிழ்மணத்தில் போலி பெயரிலும் அதே பார்பன பண்ணாடைகள் தான் என்றும் வெறுப்புடன் உலா வருகின்றனர்.

இலவசமாக சாதுவேசம் போட்டு பினாத்தும் மற்ற பார்பனர்கள், இன்னும் தமிழை தூற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதியான முதலமைச்சர் கருணாநிதி யாரைக் கேட்டு அறிவித்தார் என்று கேட்கிறார்கள். லாரியில் ஏற்றினால் நான்கு பேர் குறைய இருக்கும் பார்பனர்களைக் கேட்டுக் கொண்டு தமிழ்சார்ந்த விசயங்களுக்கு கருணாநிதி முடிவெடுக்க வேண்டுமாம். சித்திரைக்கு ஓலமிடும் ஒரு பார்பனனின் அபத்த பதிவு ஒன்றில் தமிழ் அறிஞர்களை கிழம் கிட்டு என்று எழுதி திட்டி இருக்கிறான். அதற்கு ஆதரவு கொடுத்து ஒரு பார்பன பதிவர், ஜெயலலிதாவின் ஆடுகோழி திட்டத்திற்கு ஏற்பட்ட கெதி தான் தை 1 க்கும் ஏற்படும் என்று ஆசி வழங்கி இருக்கிறார். இவர் ஆன்மிக பதிவர் என்று தன்னைக் கூறிக் கொண்டு மிதவாத பார்பனீயம் கட்டிக்காப்பவர். ஜெயலலிதா இந்துத்துவ வெறியுடன் ஆடுகோழி வெட்ட தடை போட்டதை பொதுமக்கள் காறி உமிழ்ந்து பதிவியை விட்டே துறத்தினார்கள். அதற்கும் புத்தாண்டு அறிவிப்புக்கும் என்ன தொடர்பு ? பண்ணாடைகளே பதில் சொல்லுங்கள்.

தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுவனும் உவேசாமிநாத ஐயரும் ஒரு கிழவன் தான். மறை மலை அடிகளை கிழங்கிட்டு என்னும் போது பார்பனன் உவேசாமி நாதனை உங்களால் ஏன் கிழவன் என்று சொல்ல முடியவில்லை. அந்த கிழவன் தமிழை காப்பாற்றுகிறேன் என்ற போர்வையில் தமிழ்புலவர்கள் பார்பனர்களின் தகிடுதத்தங்களை சாடிய செய்யுளையெல்லாம் அழித்தான். பல செய்யுள்களை திருத்தினான். அதுதான் அவன் தமிழுக்கு செய்த சேவை. அவன் கிழம்கிட்டு இல்லையா ? பண்ணாடைகளே பதில் சொல்லுங்கள்.

சிதம்பரத்தில் தமிழ் பாடுவதற்கு எதிர்ப்பு, தமிழ் ஆண்டை மாற்றி அமைக்க எதிர்ப்பு, தமிழ் மந்திரத்திற்கு எதிர்ப்பு. அப்பறம் ஏண்டா நாங்களும் தமிழர்கள் என்று கூறிக் கொள்கிறீர்கள். தமிழ்தான் உங்க கூட்டத்திற்கு பிடிக்கவில்லையே அப்பறம் ஏண்டா தமிழில் வந்து வாந்தி எடுக்கிறீர்கள். பதில் சொல்லுங்கடா பண்ணாடைகளா.

பார்பனர் சுயநல நோக்கோடும், துவேசமாகவும் சொல்லும் அறிவுரைகளை புறந்தள்ளுவோம், தினமலர் என்ற பார்பன ஏட்டில் பெரியாரை ஈரோட்டு குருகுலம் என்று குத்தி இருக்கிறது. குருகுலம் என்ற பெயரில் காமக் கூடம் நடத்திக் கொண்டிருக்கும் ஊத்தவாயன் இருள் நீக்கி சுப்பிரமணியின் குருகுலத்தைவிட உலகத்தில் சிறந்த குருகுலம் உண்டா ?

ஊடகங்கள் இல்லாத காலத்தில் பரப்பிய பொய்யை தற்போது பரப்ப முடியவில்லையே என்பதால் பார்பனர் கடுப்புடன் இருக்கின்றன. தமிழன் என்ற போர்வையில் அறிவுரையும் கருத்தும் சொல்ல வரும் பண்ணாடைகளின் எழுத்துக்களை பார்த்தால் சிரிக்கவே தோன்றுகிறது. இப்பொழுது புரிகிறதா ? பார்பனன் மட்டும் தான் தமிழ் எதிரி.

~~~~~~~~~~~~~~~~~~~

குத்தாலம் குப்புசாமி என்ற வாசகர் இந்த கருத்தை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதை இடுகையாக இட்டுவிட்டேன். குப்புசாமி சார், பதிவு காரமாக இருக்கிறது. பதிவர்கள் ஆட்சேபித்தால் எடுத்துவிடுவேன். குப்புசாமி சார், கருத்துக்களை கொஞ்சம் ஆரோக்கியமாக சொல்லி இருக்கலாம்.

திரிஷாவிற்கு திரிசங்கு சொர்கத்திலும் இடம் கிடையாது.

தமிழ்நாட்டில் பிறந்த திரிஷாவிற்கு தமிழ் தெரியாமல் வளர்த்த திரிஷாவின் அம்மா, அப்பாவிற்கு என் வாழ்த்துக்கள். சம்ஸ்கிருதம் தெரியும்மோன்னோ..இல்லையின்னா என் வாழ்த்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

எனக்குப் பிடித்தது கடல் உணவு வகை என்று சொன்னதில் கூட எனக்கு வருத்தமில்லை. பெங்காலி பிராமனாள் எல்லாம், மீனை கத்திரிக்காய் போல சாப்பிடுவாங்க. ஏதோ டிவி பேட்டியில் கூடச் சொல்லியிருந்தா, தமிழே என் வாயில் வராது என்று, அப்போது தான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்போ என்னான்னா, ஏதோ படத்திலே, அவர்டுக்காக சொந்த குரலில் பேசுறாளாம். அதுக்கு தமிழ் கத்துக்கிட்டு தமிழிலே பேசுறாளாம்.

திரைப்படங்களில் வரும் நடிகைகளுக்கு கோவில் கட்டி புனிதப்படுத்தி வரும் தமிழ்நாட்டில், திரிஷா இப்படி ஒரு செயலைச் செய்யலாமா. அதை ஆங்கிலத்திலே எழுதி வைச்சு படிச்சிக்க வேண்டியது தானே. அதுக்காக தமிழ் படிக்கனும்மா என்ன. நீச பாஷை கத்துண்டு, பேஸினா, திரிசங்கு சொர்கத்தில் கூட இடம் கொடுக்கப்பிடாது என்று நான் ஷபிக்கிறேன்.

தினமலரின் கவலை - பஞ்சாங்கம் "நாட்டுடமை" ஆகுமா?

வீ.ராஜகோபால், ஓய்வு பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மயிலாப்பூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்:

தீபாவளி, பொங்கல் பண்டிகை, தமிழ் வருடப் பிறப்பு எல்லாம் பஞ்சாங்கப்படி, நாள், நட்சத்திரம் பார்த்து, இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள். "பஞ்சாங்கம் பார்க்க மாட்டோம்' என பகுத்தறிவாளர்கள் கூறினாலும், ஜோதிடர்கள் கணித்த பஞ்சாங்கப்படி தானே பொங்கல் வருகிறது. பஞ்சாங்கம் என்றால், வருடம், மாதம், நாள், நட்சத்திரம், திதி என்ற ஐந்து அங்கங்கள் கொண்டது. சூரியன் (ஞாயிறு), சந்திரன் (திங்கள்), செவ்வாய் (அங்காரகன்), புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகிய கிரகங்கள் விண்வெளியில், 12 ராசி மண்டலங்கள் வழியாக சஞ்சாரம் செய்கின்றன என்பதை அடிப்படையாக வைத்தே ஜோதிட நிபுணர்கள் பஞ்சாங்கங்களை கணிக்கின்றனர். ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும், தை மாதம் முதல் தேதியன்று பொங்கல் பண்டிகை என்று பஞ்சாங்கம் ஏன் சொல்கிறது? அதுவரை தனுசு ராசியில் இருந்த சூரியன், தை முதல் நாள் அன்று மகர ராசியில் பிரவேசிக்கிறார். ஆகவே தான், இந்தியாவெங்கும் இந்துக்கள் தை முதல் நாளை, "மகர சங்கராந்தி' என்று கொண்டாடுகின்றனர். அது உத்தராயணம் தொடங்கும் புண்ணிய தினமும் ஆகும். மகர ராசியில் பிரவேசிக்கும் சூரிய பகவானுக்கு, தமிழகத்தில் மக்கள் பொங்கல் வைத்துப் படைப்பதால், அதற்கு பொங்கல் என்று பெயர். இதனால் தான் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு மகர சங்கராந்தி அல்லது பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.பகுத்தறிவு வாதம், ஈரோட்டு குருகுலம் பிறப்பதற்கு பல நுõறு ஆண்டுகள் முன்பிருந்தே, தமிழ் வருடப் பஞ்சாங்கங்கள் பொங்கல் பண்டிகை வரும் நாள் பற்றி கூறி வருகின்றன. ஆகவே, காலம் காலமாக பஞ்சாங்கம் பார்த்து இந்துக்கள் கொண்டாடி வரும் பொங்கல் , மகர சங்கராந்தி புண்ணிய நாளை, இப்போது பகுத்தறிவுக்காரர்களும் ஏற்றுக் கொண்டு, "தமிழர் திருநாள்' என்று விழா எடுப்பது வரவேற்கத்தக்கதே. தை மாதம் முதல் நாள் தான் தமிழரின் புத்தாண்டு என விரைவில் அறிவிப்பு வரும் என்றால், இந்தப் பங்குனி முடிந்து, சித்திரையில் வெளிவர இருக்கும் சர்வதாரி பஞ்சாங்கங்களுக்கு அரசாங்கம் தடை விதிக்குமா? சித்திரை மாதம் முதல் அடுத்த மார்கழி முடிய சர்வஜித்து ஆண்டு தான் என்றும், சர்வதாரி பஞ்சாங்கம் அடுத்த தை மாதம் அதாவது ஆங்கில 2008ம் ஆண்டு தொடங்கி 2009ம் ஆண்டு மார்கழி வரை நீடிக்கும் என அரசாங்கம் ஆணை பிறப்பிக்குமா? பிறப்பித்தால் அது சட்டப்படி செல்லுமா? தமிழ்வருடப் பஞ்சாங்கங்கள் தயாரிக்கும் ஜோதிடர்களும், பஞ்சாங்கம் பார்க்கும் மக்களும் இதை ஏற்றுக் கொள்வார்களா அல்லது தமிழக அரசே பஞ்சாங்கம் தயாரிப்பதை நாட்டுடைமை ஆக்கி, "தை மாதம் முதல் மார்கழி வரையிலான தமிழ் ஆண்டு' எனப் புதிய முறையில் பஞ்சாங்கங்கள் தயாரித்து விற்பனை செய்வார்களா? ஒன்றும் புரியவில்லை.
___________________

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப...... முக்கியம், குடுமி இல்லாமல், காதுல பூ வைக்காமல் வாழப் பழகவில்லையா ? இதெல்லாம் வீட்டுக்கு வீடு வந்து யாரும் சொன்னாதால் பார்பனர்கள் விட்டொழித்தார்களா ?

பார்பனரின் ஆசிர்வாதத்துடன் பஞ்சாங்கம் மசுரு மட்டை எல்லாம் பார்த்து பார்த்து பாரதம் சுபிக்க்ஷ்ம் அடைந்து பசிபினி பஞ்சம் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்றுவாழ்கிறார்கள்...? போங்கடா பொழப்பத்தவனுங்களா.

வீ.ராஜகோபால், ஓய்வு பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மயிலாப்பூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: - என்னது....? ஆதிதிராவிட நல அலுவலராக இருப்பவர் மயிலாப்பூர் மாமாவா ? கெட்டுது போ ! நல்லா இருங்கடே. ஒருவேளை ஆதிதிராவிடர் என்று வைத்துக் கொண்டாலும் பழைய பஞ்சாங்கத்துக்காக யாராவது இவ்வளவு கவலை அடைவார்களா ? தினமலர் மாமா...! குடுமியை மறைங்கோ. ப்ளாகர்கள் மோசமானவர்கள். சட்டைக்குள் நெளிவதை கண்டுபிடித்துவிடுவார்கள்.