Monday, February 4, 2008

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு....

இந்திய தேசிய அரசு ஒரு உத்தரவுப் போட்டா, அதை மதிச்சு நடக்கிறது தானே மாநில அரசாங்கத்தின் வேலை. நடுவன் அரசு, எஸ்.சி/எஸ்.டி சமூகத்தினருக்கு உதவித் தொகை வழங்குவதில் ஒரு சிறிய மாற்றம் செய்திருக்கிறது. அதை அப்படி மதித்து நடக்காமல், தான் தோன்றித்தனமாக, இந்த திராவிட திம்மிகள் தவ்வுகிறது.

அப்படி என்ன பெரிசா மாறுதல் செஞ்சிட்டா. அட்டவனை சாதி மக்களுக்கு, கல்லூரியில் நுழைந்துப் படித்தாலே, உதவித் தொகை என்று இருந்ததை, 60% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, உதவித் தொகை என்று மாற்றியமைச்சியிருக்கா. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு. 60% என்று சொன்னால் தானே படிப்பார்கள். இல்லாவிடில் படிக்காமல் பணம் மட்டும் பெற்று சும்மாயிருப்பர்கள் அல்லவா.

அதுவுமில்லாமல், சிறப்பு தகுதிகள் இல்லையே. உன்மையான மைனாரிட்டியாக ( அதாவது 3% மொத்த ஜனத்தொகையில் ) இருந்தால் தானே அது கொடுக்கப்படனும்.
அதில் ஒரு உள்ளார்ந்த உன்னதமான நோக்கம் இருக்கு என்பது தமிழகத்தின் நிரந்திர தலைவலி, ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் தெரியும். காங்கிரஸ்காரா எல்லாம், அவ அவா சண்டையில் மும்மரமா இருக்கா. அதுனாலே, அவ வழக்கம் போல ஒதுங்கிடுவா.
இந்த மாற்றம் அறிவித்தவுடன், உடனடியாக கருணாநிதி, இதை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். தமிழகத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்று அறிவிக்கிறார். படிக்க வந்துள்ள தாழ்த்தப்பட்டுள்ள சமுதாய மாணவர்களின் கண்களைக் குத்தும் மோசமான முயற்சி என்று வீரமணி சொல்லுறார். வை கோ, மத்திய அரசு, இந்த உத்தரவை மீட்டுக்கொள்ள வேண்டுகோள் வைக்கிறார். கம்பூனிஸ்ட் கட்சிகள், இது அந்த மக்களுக்கு இழைக்கப்ப்டும் துரோகம் என்று அலறுகிறது.

ஆனால், நம்மாத்து பொம்மனாட்டி, ஜெயலலிதா, அதை எல்லாம், சட்டை செய்யவே இல்லை. அவருக்குத் தெரியும். எது மக்கள் பிரச்சனை. அன்பழகன் உதவிப் பேராசிரியரா, இல்லை பேராசிரியாரா என்பதற்கு விடை கண்டுப்பிடிப்பது தானே முதல் வேலை. அதை விடுத்து, இது மாதிரி விசயங்களில் தலையிடலாமா. இது வரை, ஜெயலலிதா தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதாக யாராவது நிருபிக்க முடியும்மா. முடியாது. அந்த தப்பை அவர்கள் செய்யவே மாட்டார்கள்.

இந்திய இறையான்மைக்கு சவால் விடும், கருனாநிதி நடுவன் அரசின் ஆனையயை மதிக்கத் தவறியதற்காக, ஆட்சியயை கலைக்க முடியும்மா என்று யோசித்து வருகிறார். அதனால், அந்த உன்னதமான காரணத்தை, மக்களுக்கு அறிவிக்க முடியாது சூழ்நிலையில் இருக்கிறார். அது நீசர்களுக்குச் சொன்னாலும் புரியாது.

ஜெயலலிதா நினனப்பதைச் செய்யும், உலக அறிவாளி சோ, மாரி போல் கருத்துக்களைப் பொழிபவர். அவர் கூடிய விரைவில் தனது கேள்வி பதிலில் இதற்கான சப்பைக் கட்டு, கட்டுவார் என்று எதிர்பாருங்கள்.

3 comments:

Anonymous said...

இலைக்காரரே, அந்தப் பதிவு என்னாச்சு

Anonymous said...

யோவ் சுப்புடு,

நீ யார் என்பது எனக்குத் தெரியும்.

Anonymous said...

ஏய் பாலா பன்னாடை, நீ யாருனு இந்த ஊருக்கே தெரியும், அதான் அவன் அவன் உன்னை காறி காறி துப்பரானே...