Friday, January 25, 2008

திரிஷாவிற்கு திரிசங்கு சொர்கத்திலும் இடம் கிடையாது.

தமிழ்நாட்டில் பிறந்த திரிஷாவிற்கு தமிழ் தெரியாமல் வளர்த்த திரிஷாவின் அம்மா, அப்பாவிற்கு என் வாழ்த்துக்கள். சம்ஸ்கிருதம் தெரியும்மோன்னோ..இல்லையின்னா என் வாழ்த்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

எனக்குப் பிடித்தது கடல் உணவு வகை என்று சொன்னதில் கூட எனக்கு வருத்தமில்லை. பெங்காலி பிராமனாள் எல்லாம், மீனை கத்திரிக்காய் போல சாப்பிடுவாங்க. ஏதோ டிவி பேட்டியில் கூடச் சொல்லியிருந்தா, தமிழே என் வாயில் வராது என்று, அப்போது தான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்போ என்னான்னா, ஏதோ படத்திலே, அவர்டுக்காக சொந்த குரலில் பேசுறாளாம். அதுக்கு தமிழ் கத்துக்கிட்டு தமிழிலே பேசுறாளாம்.

திரைப்படங்களில் வரும் நடிகைகளுக்கு கோவில் கட்டி புனிதப்படுத்தி வரும் தமிழ்நாட்டில், திரிஷா இப்படி ஒரு செயலைச் செய்யலாமா. அதை ஆங்கிலத்திலே எழுதி வைச்சு படிச்சிக்க வேண்டியது தானே. அதுக்காக தமிழ் படிக்கனும்மா என்ன. நீச பாஷை கத்துண்டு, பேஸினா, திரிசங்கு சொர்கத்தில் கூட இடம் கொடுக்கப்பிடாது என்று நான் ஷபிக்கிறேன்.

3 comments:

said...

அவாளோட பேட்டி உரல் கொடுத்தேள்னா, ரொம்ப புண்யமா போகும் உமக்கு... நேக்கு நாழியாயிடுத்து... போயிட்டு வரேன்.

எமகாதகன் said...

சின்னப்பையன் கேட்பது திரிஷா குளியல் சீனின் சுட்டியா?

Anonymous said...

திரிஷாக்கு பாத்ரூம்ல் ஆவது இடம் உண்டா ?