Sunday, January 13, 2008

திருவையாற்றில் 3 நாள் தமிழிசை விழா

தமிழகத்தில் நடப்பதால் தமிழ் இசைவிழாவாம். கேளுங்க இந்த கூத்தை. வழக்கம் போல் புரியாத மொழியில் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருந்து மொழி வளர்க்க பாடுபடுகிறது. இதற்கு தமிழக அமைச்சர்கள் ஆசிர்வாதம் வழங்குகிறார்களாம். நீ முட்டள் என்று சொல்வதை விட ஒருவனை முட்டாளாக உணரவைப்பது தான் புத்திசாலித்தனம் சாணக்கியத்தம். இதைத்தான் இசைவிழாக்கள் செய்து வருகின்றன.
***************

தஞ்சாவூர்: திருவையாற்றில் ஜனவரி 15 ம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு தமிழிசை விழா நடக்கிறது.

தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் தமிழிசை மன்றம் சார்பில் 37 வது தமிழிசை விழா மூன்று நாட்கள் நடக்கிறது. மாநிலத்தில் உள்ள இசைக் கலைஞர்கள், தமிழிசை பாடகர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், இதில் பங்கேற்கின்றனர்.

ஜனவரி 15 ம் தேதி மாலை 4.30 மணி அளவில் கல்யாணபுரம் கணேசன் குழுவினரின் பெருவங்கியம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது.

இரவு 7.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. தமிழிசை மன்ற தலைவர் ஆறுமுக கொன்னமுண்டார் தலைமை வகிக்கிறார்.

தமிழக வணிகவரித் துறை அமைச்சர் எஸ்.எம்.உபயதுல்லா, முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாறு வாண்டையார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் பேசுகின்றனர்.

மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம் இசைக் கலைஞர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்குகிறார்.

0 comments: